பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மனமும் அதன் விளக்கமும் அதில் உள்ளவர்கள் எல்லாரும் வெள்ளைக்காரர்கள். கொஞ்து தூரம் போனதும் விமானம் கெட்டுவிட்டது. உடனே பாரஷ"ட் என்னும் குடையைக் கொடுத் தார்கள். நான் அதைப் பிடித்து இறங்கினேன். ஒரு குளத்திற்குள் போய் விழுந்தேன். உடனே விழித்துக் கொண்டேன்." கனவு 3. "நான் பழனிக்கு ரெயிலில் போவதாகக் கனவு கண்டேன். ஒரு ஸ்டேஷனில் இறங்கினேன். அப்பொழுது பயணச் சீட்டுப் பரிசோதகர் வந்து பயணச் சீட்டைக் காட்டும்படி கேட்டார். நான் வாங்கவில்லையென்று கத்தினேன். ஏண்டா சத்தம் போடுகிருய்?' என்று அப்பா கேட்டார். நான் விழித் துப் பார்த்தேன். அப்பொழுது படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தேன்." வெவ்வேறு அளவில் ஆசை நிறைவேற்றத்தை இக் கனவுகளில் காணலாம். அதிகாரம் செய்தல், மிரட்டு தல், அடித்தல் முதலிய செயல்களைச் செய்வதைக் கனவில் தோன்றுபவர் பொதுவாகத் தந்தையைக் குறிப்பார். உயரத்திலிருந்து விழுவது போன்ற கனவு கள் மனித பரிணுமத்திலே இவன் விலங்கு நிலையிலிருந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவத்தைக் குறிப்பதாகச் சிலர் கூறுகிரு.ர்கள். மரங்கல்ளில் வசித்த அவ்விலங்குகள் துரக்கத்தில் தவறிக் கீழே விழுந்ததால் உண்டான ஆழ்ந்த உள்ளக் கிளர்ச்சி என்றும் மறையாமல் மனத்தில் பதிந்துவிட்டதாகவும், அது வழிவழியாக வந்து இன்னும் உறக்கத்திலே கனவாகத் தோன்றுகிற தென்றும் அவர்கள் விளக்குகிரு.ர்கள். உறங்கும்போது கால்களை நீட்டுவதாலோ, அல்லது வேறு உடல் அசைவு கள் ஏற்படுவதாலோ கீழே விழுவதுபோன்ற கனவு பிறக்கலாமென்று உடலியலார் கூறுகிருர்கள். நல்ல