பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனவும் மனமும் 47 நடத்தையிலிருந்து தவறி நடக்க உதித்துள்ள விருப் பத்தை அக்கனவு காண்பிக்கிறது என்று உளப்பகுப் பியலார் எண்ணுகிரு.ர்கள். கனவில் தோன்றும் சில குறிப்பிட்ட நிகழ்ச்சி களைப்பற்றிப் பொதுவான விளக்கம் சொல்லலாமென் முலும் அவ்வாறு விளக்கம் சொல்வதற்கு யாதொரு திட்டமான விதியோ சூத்திரமோ கிடையாது. கனவு காண்பவனுடைய தனிப்பட்ட மன நிலைச்கு ஏற்றவாறு அவற்றிற்குப் பொருள் காணவேண்டும். பல கனவு களை ஆராயும்போது அவை விந்தையாகவும், தொடர் பின்றியும், சிக்கல்கள் மிகுந்தும் இருப்பது தெரிய வரும். அவற்றையெல்லாம் புரிந்துகொள்ளுவதற்கு பிராய்டு ஒரு புதிய முறையைக் கையாண்டார். அதைத்தான் விருப்பக் கருத்தியைபுமுறை (Free Association Method) greir@a7rissir. EPG seurswoulli Lugu பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, ஒவ்வொரு பகுதியை யும் அக்கனவைக் கண்டவனிடம் கூறும்போது அவன் மனத்தில் ஏற்படும் எண்ணங்களையெல்லாம் ஒளிக் காமல் சொல்லும்படி கேட்கவேண்டும். அப்படிக் கேட்கும்போது அவனைத் தனியாக ஒரு இருண்ட அறையில் படுத்திருக்கும்படி செய்யவேண்டும். அவன் கூறுகின்றவைகளைக் கனவுடன் சேர்த்து ஆராய்ந்தால் அவனுடைய மனநிலையையும் அதில் மறைந்து கிடக்கும் ஆசைகளையும் அறிய முடியும் என்று பிராய்டு சொல்லுகிரு.ர். அவ்வாறு ஆராய்ந்த ஒரு கனவைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.