பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மனமும் அதன் விளக்கமும் மனத்தில் என்ன என்ன தோன்றுகின்றனவோ அவற்றையெல்லாம் அப்படியே சொல்லிக்கொண் டிருங்கள். எதையும் ஒளிக்கக்கூடாது. உம்முடைய அறின்வக்கொண்டு எதையும் ஆராய்ந்து பார்க்க லாகாது. தோன்றியது தோன்றியபடியே கூற வேண்டும். எண்ணங்கள் மிக இழிந்தவைகளாக இருந் தாலும் அவற்றை மறைக்க முயல வேண்டாம். எல்லா வற்றையும் தாராளமாகச் சொல்ல வேண்டும். அவற் றைக் கொண்டு தான் உண்மையைக் காணலாம்" என்று இவ்வாறு கூறிவிட்டுக் கனவின் பகுதிகளை ஒவ்வொன் முகக் கூறினேன். அவற்றைக் கேட்டு, ப. சொன்ன எண்ணங்களையும் கீழே தருகிறேன். கனவின் பகுதி 1. பாம்புப் புற்று:-"எங்கும் பாம்புப் புற்றுகள். அவற்றைப் பார்த்துக்கொண்டே நடக்கிறேன்-சிறு வயதில் பாம்புப் புற்றுக்குப் பூசை செய்வதைப் பார்த்தால்-இரவில் நடக்கும்போது பாம்பிருக்குமோ என்று அஞ்சுதல்-வழியிலே ஒரு பாம்புச் சட்டை-பாம்பிருக்குமோ என மீண்டும் அச்சம்-ஒரு நாள் இரவிலே வீட்டிற்குத் தனியாக வருதல். பாம்பு வீட்டிற்குள்ளே இருந்தால், இருட் டிலே என்ன செய்வது?-தீக்குச்சியைக் கொளுத்திக் கொண்டே உள்ளே செல்லவேண்டும். முன்பு கணக்க ராக இருந்தபோது எனது அறையில் ஒரு நாள் சர சர வென்று சப்தம்-வெளியே போய்விடுகிறேன்-திரும்பி வந்து பார்த்தபோது பாம்பு-மற்றவர்கள் வந்து அதை அடிக்கிருர்கள். நிலாவைப் பாம்பு விழுங்குவ தாகச் சிறுவயதில் கேட்ட கதை. கனவின் பகுதி 2. ஒனுன் பாம்புப் புற்றில் துறை தல்:-"ஒளுன் அடிக்கடி என் கண்ணில் படுகிறது