பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகற் கனவு 57 வாறு தான் நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றியோ அவன் தன் மனத்தை ஊன்றிச் செலுத்தி எண்ணமிடுகிருன். மனம் போன போக்கிலே அவன் செல்லுவதில்லை. அவன் மனத்தை எண்ண உலகில் உறுதியாக நடக்கும்படி அறிவைக்கொண்டு தூண்டு கிருன். பகைவர்களின் கோட்டையைக் கைப்பற்ற வேண்டுமானல் சேனைத் தலைவன் அதற்காக எத்தனை ஆழ்ந்து சிந்தித்துத் திட்டம் போடவேண்டும்! எவ்வாறு தாக்கினல் எளிதில் வெற்றிபெற முடியும் என்றும், அதற்கு எத்தனை பெரிய படை பலம் வேண்டு மென்றும், அவன் நன்கு எண்ணிப் பார்த்து முடிவுகட்ட வேண்டும். பல ஆயிரக்கணக்கான வீரர்களைப் பலி கொடுக்க வேண்டுமானலும் அதற்கு அவன் தயங் காமல் இருக்கவேண்டும். இங்ங்ணம் எண்ணிப் பார்த்து வேண்டுவனவற்றையெல்லாம் முன்னேற்பாடாகச் செய்துகொண்டு போர் தொடங்கிளுல்தான் அவன் வெற்றி காண முடியும். அவ்வாறில்லாமல் தான் எளிதிலே பகைவர்களே வென்று கோட்டைக்குள் நுழைந்துவிட்டதாகவும், புகழ்மாலை பெற்றுவிட்ட தாகவும் அவன் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருந் தால் வெற்றி கிட்டிவிடாது. செயலிலேயே நாட்டமுள்ளவனும் பகற் கனவு காண்பதுண்டு. ஆளுல், அவன் அத்துடன் நின்று விடுவதில்லை. அவன் அக்கனவை நனவாக்க முனை கிருன். உறுதியோடு செயலில் ஈடுபடுகிருன். வான வெளியிலே சிறகை விரித்து வெள்ளைக் கொக்கு ஒயி லாகப் பறக்கின்றது. அதைப் பார்த்து மனிதன் தானும் பறப்பதுபோலப் பகற் கனவு காண்கிருன். ஆயிரக்கணக்கானவர்கள் அத்துடன் மன நிறைவு அடைந்துவிடுகிரு.ர்கள். ஒன்றிரண்டு பேர்கள் அதை