பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மனமும் அதன் விளக்கமும் வைத்துக் கற்பனைக் கவிதைகள் வரைகிரு.ர்கள். ஒருவன் உண்ழையாகவே பறக்க முயலுகிருன், பகற் கனவிலே அவன் அமைத்துக்கொண்ட விமானத்தை உண்மை யாகவே உருவாக்கத் தனது அறிவைப் பயன்படுத்தி ஆழ்ந்து சிந்திக்கிருன். பறப்பதற்கு வேண்டிய விஞ்ஞான உண்மைகளைக் காண முயல்கிருன். பல சோதனைகள் செய்கிருன். அவற்றின் விளைவாக விமானம் நமக்குக் கிடைக்கின்றது. கனவிற்கும் பகற்கனவிற்கும் பொதுவானவை பல இருக்கின்றன. அவை இரண்டும் கனவு காண்பவனையே நடுநிலையாகக் கொண்டிருப்பவை. வாழ்க்கையில் நிறை வேழுது மனத்தில் மறைந்து கிடக்கும் ஆசைகள் நிறைவேறுவதையே முக்கியமாக இரண்டிலும் காண் கிருேம். சில ஆசைகளும் எண்ணங்களும் இழிந்தவை களாக இருக்கலாம். அவற்றை மனிதன் அறிவில்ை அடக்க முயலுகிருன். அதனால் அவை மறை மனத்தில் அழுந்துகின்றன. உறங்குகின்றபோது அறிவின் ஆதிக்கம் சற்றுத் தளர்கின்றது. அந்த வேளையிலே அவைகள் கனவாக வெளியாகின்றன. அதுபோலவே பகற் கனவிலும் அவ்வாசைகள் தோன்றி ஒரு வகை யான மன நிறைவை அளிக்கின்றன. பகற் கனவைப்பற்றி ஜீ. எச் கிரீன் என்பவர் பின் வருமாறு எழுதியுள்ளார்: 1. நமக்குத் தெரியாமல் மனத்திலே அழுந்தி மறைந்து கிடக்கும் ஆசைகளைப் பகற் கனவு நிறை வேற்றுகின்றது. 2. ஒருவன் தன்னைப் பற்றியே உயர்வாகக் கருது வதை அது குறிக்கின்றது. 3. உலகத்தைப் பற்றி அவன் வெளிப்படை யாகக் கொண்டுள்ள நினைப்பைத் தவிர வேருெரு