பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மனமும் அதன் விளக்கமும் றும், வடை பாயசம் எல்லாம் ஏராளமாகச் செய்யப் பட்டிருக்கின்றனவென்றும் கூறிவிட்டு எங்களுடன் உணவு கொள்ள மறுத்துவிட்டாள். அது அவளுடைய பகற்கனவைக் குறிக்கின்றது. 'குழந்தைகள்தான் மிகுதியாகப் பகற்கனவு காண் பவர்கள்; அவர்களுடைய பகற்கனவுகளே ஆராய்ந்து பார்த்தால் அவை பெரும்பாலும் வாழ்க்கையில் அடை யப்பெருத ஆசைகளை நிறைவேற்றுவனவாக இருக் கும்' என்று மெக்டுகல் எழுதுகிருர், பொதுவாகக் கூறினால், பத்தாவது வயதில் துணி கரச் செயல்களைப் பற்றிய பகற்கனவுகள் உண்டா கின்றன. பலருடன் கூடி வீரச் செயல்கள் செய்வது போலவும், அவற்றிலெல்லாம் தானே முக்கியமாக இருப்பது போலவும், தனது தோழர்களுக்குத் தானே தலைவனுக விளங்குவதுபோலவும் காட்சிகள் தோன்று கின்றன. காளைப் பருவத்திலே பிறக்கும் பகற்கனவு கள் பலதிறத்தனவாகும். அப்பொழுது அதில் காத லுணர்ச்சியும் இயல்பாகவே கலந்திருக்கும். இவ்வாருக ஒவ்வொரு பருவத்திலும் அதற்கேற்ற வாறு பகற் கனவுகள் உண்டாகின்றன. சிறுவர்களின் பகற் கனவுகள் பொதுவாகக் குற்றமற்றவைகளாக இருக்கும். ஏனெனில் அந்தப் பருவத்தில் அடக்கி யொடுக்க வேண்டிய இழிந்த எண்ணங்கள் உண்டாகக் காரணமில்லை. கனவுகளை ஆராய்வது போலவே பகற்கனவுகளை யும் ஆராய்ந்தால் ஒருவனுடைய மன நிலைமையை அறிந்துகொள்ள முடியும். பகற்கனவிலே அவனுடைய ஆசைகளும் எண்ணங்களும் பொதுவாக நேரிடை யாகவே வெளிப்படுகின்றன. அந்த வகையில் அவ