பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிலி 65 மாட்டான். அவனைக் கேலி செய்யவேண்டுமெனச் சில மாணவர்கள் ஒரு நாள் சூழ்ச்சி செய்தார்கள். ஒர் அறைக்குள்ளே போய் ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துவரும்படி அவனை ஏவினர்கள். அவன் உள்ளே சென்றதும் மின்சார விளக்கைச் சட்டென்று அணைத்து விட்டார்கள். அவன் வீரிட்டு அலறிக்கொண்டு வெளியே ஒடிவந்தான். எல்லாருக்கும் அது விளை யாட்டாக இருந்தாலும் அவனுக்கு அது ஒரு பெரிய கிலியாக இருந்தது. பிறகு அவனை நிதானமாக ஆாாய்ந்து பார்த்ததில் குழந்தையாக இருந்தபோது இருட்டறையில் பேயிருப்பதாக யாரோ கூறி அச்ச முறுத்தியதுதான் அந்தக் கிலிக்குக் காரணமென்று தெரியவந்தது. பிராணிகளைக் கண்டு ஏற்படும் கிலிக்கு சிக்மண்ட் பிராய்டு வேருெரு காரணமும் கூறுகிரு.ர். பெற்ருே ரிடம் குழந்தைகளுக்குண்டாகும் அச்ச உணர்ச்சியா னது விலங்குகளிடம் அக் குழந்தைகளுக்குக் கிலியாக மாறுகிறதாம். 'விலங்குகளைக் கண்டு பிறக்கும் கிலி களில் பலவற்றை ஆராய்ந்தபோது அவை பெற்ருே ரிடமுள்ள அச்சத்தால் பிறந்தவை எனத் தெரிய வந்தது' என அவர் கூறுகிரு.ர். பொதுவாக நோக்கும்போது நிலைமைக்கும் அனு பவத்திற்கும் ஏற்றவாறு பலவகையான கிலிகள் பிறக் கின்றன. மூடப்பட்டுள்ள இடத்தைக் கண்டு கிலி, திறந்த வெளியில் கிலி, செங்குத்தான இடக் கிலி, நெருப்புக் கிலி, இருட்டுக் கிலி, தூசு பட்டு நோய் பிடிக்கும் எனக் கிலி, பூனைக் கிலி, அச்சத்தைப்பற்றிய கிலி என்பன போன்ற பல கிலிகளால் மக்களில் பலர் வருந்துவதை நாம் காணலாம். பரபரப்பும் மன அதிர்ச்சிகளும் நிறைந்த இக்கால வாழ்க்கையிலே பலர்