பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றுக் கொடுத்தது யார் ? இப்பொழுதுதான் பிறந்த கன்றுக்குட்டி மெது வாக முயன்று எழுந்து நிற்கிறது. தாய்ப் பசுவின் பால் சுரக்கும் மடியருகே சென்று பால் குடிக்கத் தொடங்குகிறது. மடியிலே வாயை வைத்துப் பால் குடிக்க அதற்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்? வாத்துக் குஞ்சு முட்டையினின்றும் வெளி வரு கிறது; தண்ணிரைக் கண்டதும் அதில் உடனே இறங்கி நீந்துகிறது. அதற்கு யார் நீந்தக் கற்றுக் கொடுத் தார்கள்? குளவி ஒன்று பருவம் அடையும்போது கூடு கட்டத் தொடங்குகிறது. அதில் பக்கத்திலே முட்டையிடு கிறது. புழுவொன்றைப் பிடித்து வந்து கூட்டிலே வைக்கிறது. புழுவைத் தன் கொடுக்கால் கொட்டி அது நினைவற்று ஆனல் உயிரோடு கிடக்கும்படி செய் கிறது. முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவந்த பிறகு அவற்றிற்கு உணவாகப் பக்கத்திலேயே இப்படிப் புழுவை வைத்துக் கூட்டை மூடிவிட்டு வெளியேபோய் இறந்துவிடுகிறது. அந்தக் குளவிக் குஞ்சுகள் பெரி தாகும்போது அவைகளும் இதே போன்று செய் கின்றன. அவற்றிற்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்? கற்றுக் கொடுக்கத் தாய்க் குளவிகூட இல்லையே? பிறகு எப்படி அந்தக் குஞ்சுகளும் தாய் செய்ததுபோலவே செயல் புரிகின்றன? இவ்வாறு கற்றுத் தெரிந்துகொள்ளாத செயல் களைச் செய்யும்படி தூண்டும் பிறவி ஆற்றல் ஒன்றிருக்