பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மனமும் அதன் விளக்கமும் இயல்பூக்கங்களை அடக்கி அழித்துவிட முடியாது என்று கண்டோம். இயல்பூக்கங்களுடன் சேர்ந்து பல உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றுகின்றன. ஆகவே, உள்ளக் கிளர்ச்சிகளையும் அடியோடு அழித்துவிட முடியாது. அப்படி முயலும்போதுதான் மறைமனக் கோளாறுகள் பல உண்டாகின்றன என்று கூறுகிருர் கள். ஆனல், இழிந்த உள்ளக் கிளர்ச்சிகளையும், இயல் பூக்கங்களையும் வேறு நல்லவகையில் திருப்பிவிட்டு உயர் மடை மாற்றம் செய்யலாம். காம இச்சையை மாற்ற முயலும் ஒருவன் அவன் பக் தனக இருந்தால் அதைக் கடவுளிடத்தே உயர்ந்த பக்தியாக மாறச் செய்கிருன்: அல்லது பிராணிகளிடத்தே அளவு கடந்த அன்பாக மாற்றி அவற்றின் சேவையிலே ஈடுபடுகிருன். அவன் கலைஞனக இருந்தால் அழகிய கலைப்படைப்பின் மூலம் அதை மாற்றுகிருன். இச்சைகள் நிறைவேரு த காலத்தில் இப்படிப் பட்ட மடைமாற்றமும் இல்லாவிட்டால்தான் மனச் கோளாறுகள் ஏற்பட அவை காரணமாகின்றன. மறிவினையாக மனிதன் சில செயல்களைப் புரிகிருன். மறிவினை (Reflex action) என்பது ஒரு புதிய சொல். ஆனல் அதைப் புரிந்துகொள்வது எளிது. ரெயிலில் ப ய ண ம் செய்யும்போது கரித் தூளொன்று கண்ணிலே விழுகிறது. கண் உடனே மூடிக்கொள்கிறது: கண்ணிர் மளமளவென்று வரு கிறது; அப்படி வந்து கண்ணுக்கு ஏற்பட்டுள்ள தொந் தரவைத் தவிர்க்க முயல்கிறது. கண் மூடுவதும், கண்ணிர் பெருகுவதும் நாம் நினைத்துப் பார்த்துச் செய்த செயல்கள் அல்ல. அவை தாமாகவே நிகழ்கின்றன. அப்படிப்பட்ட செயல்