பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டம் முன்னதா, அச்சம் முன்னதா? உள்ளக் கிளர்ச்சிகள் எத்தனை என்பது பற்றிச் சில ஆண்டுகளுக்கு முன்னலெல்லாம் பெரிய பெரிய பட்டியல்கள் வெளியிடுவதுண்டு. ஒவ்வொரு கிளர்ச் யின் தன்மையென்ன, அதனேடு தொடர்புள்ள இயல் பூக்கம் என்ன, அது பிறப்பிலிருந்தே உண்டானதா அல்லது சூழ்நிலையால் தோன்றியதா என்று இப்படி யெல்லாம் ஆராய்ச்சிகள் நடைபெறும். நடத்தைக் கொள்கை உளவியலைத் தோற்றுவித்த வாட்ஸன் என்பவர் பச்சைக் குழந்தைகளைக் கொண்டு ஆராய்ச்சிகள் நடத்தியதன் பயனக மனிதனுக்கு அச்சம், இனம், அன்பு என்ற மூன்று உள்ளக் கிளர்ச்சி கள்தான் இயல்பாகவே அமைந்திருக்கின்றன என்று கூறினர். இவர் கூறியதைப் பொதுவாக எல்லாரும் ஆமோதித்தார்கள். ஆளுல் அண்மையிலே சில உளவியலறிஞர்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாக மேலே கூறியவாறு குழந்தைகளின் உள்ளக் கிளர்ச்சிகள் தெளிவாகவும் தனித்தனியாகவும் இருக்கின்றனவா என்பதில் ஐயம் தோன்றி இருக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே உள்ளக் கிளர்ச்சிகள் இருக்கின்றன என்பதை மட்டும் நாம் தெரிந்து கொண்டால் போதும். அதற்கு மேற்பட்ட ஆராய்ச்சி களை உளவியல் அறிஞர்களுக்கு விட்டுவிடலாம். உள்ளக் கிளர்ச்சியைப் பற்றி இன்னும் ஒரு வேடிக்கையான விவாதம் உண்டு. உள்ளக் கிளர்ச்சி