பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மனமும் அதன் விளக்கமும் முதலில் தோன்றி அதன் விளைவாகச் செயல் நடை பெறுகிறதா அல்லது செயல் நடைபெற்று அதன் விளைவர்க உள்ளக் கிளர்ச்சி தோன்றுகிறதா என் பதிலே பெரிய விவாதம் ஏற்பட்டுவிட்டது. மனத்திலே துயரம் உண்டாகிறது; அதனல் ஒருவன் அழுகிருன் என்று நாம் சொல்லுகிருேம். அது தான் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிருேம். ஆளுல் வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவியலறிஞரும், கார்ல் லாங் என்ற உடலியல் வல்லுநரும் நமது நம் பிக்கைக்கு முற்றிலும் மாருன ஒரு கருத்தைப் புதிதாக வெளியிட்டார்கள். 'முதலில் மனிதன் அழுகிருன்: பிறகு தான் துயரம் என்ற உள்ளக் கிளர்ச்சி தோன்று கிறது' என்று அவர்கள் கூறினர்கள். அதாவது உடலிலே மாறுதல்கள் ஏற்பட்ட பிறகே அவற்றிற் கேற்ற உள்ளக் கிளர்ச்சிகள் எழுகின்றன என்று அவர்கள் வாதித்தார்கள். இந்தக் கொள்கை உண்மையென்றும் உண்மை யன்று என்றும் நிலைநாட்ட எத்தனையோ சோதனைகள் நடந்திருக்கின்றன. 'நீ முதலில் ஒட்டம் பிடிக்கிருய்; பிறகுதான் அச்சம் தோன்றுகிறது" என்று கூறினல் சிரிக்கத்தான் தோன்றும். ஆனல் அவ்வள்வு எளிதாக இக் கொள் கையை ஒதுக்கித் தள்ளிவிட இதுவரையிலும் முடிய வில்லை, ஷெரிங்டன், கானன் என்ற இருவர் தாங்கள் செய்த ஆராய்ச்சிகளைக் கொண்டு இக்கொள்கை தவருனது என்று காட்டச் சில ஆண்டுகளுக்கு முன்னே முயன்ருர்கள். ஆனல் இவர்களுடைய ஆராய்ச்சிகளைக் கொண்டு இக் கொள்கையை முடிவாக மறுக்க முடி