பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டம் முன்னதா, அச்சம் முன்னதா? 79 யாது என்று ஆங்கெல் என்ற மற்ருெரு அறிஞர் தக்க காரணங்களுடன் விளக்கியிருக்கிரு.ர். - இந்த விவாதத்தின் முடிவு எப்படியானலும் உள்ளக் கிளர்ச்சிகளைப் பற்றிப் பொதுவாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய உண்மைகளை அதுபெரிதும் மாற்றிவிடாது. நமது உடம் பின் வெவ்வேறு பகுதிகளில் வெவ் வேறு வகையான சுரப்பிகள் (Glands) இருக்கின்றன. வாயில் உமிழ்நீர் சுரப்பது ஒருவகைச் சுரப்பியால் தான். வளர்ச்சிக்கு உதவ ஒருவகைச் சுரப்பி இருக் கிறது. இப்படிப் பல சுரப்பிகள் இருந்து பல வேலை களைச் செய்கின்றன. சுரப்பிகளிலே நாளமில்லாத சுரப்பிகள் சில உண்டு. அவை தம்மிடத்துச் சுரக்கும் சுரப்புப் பொருளை நேராக இரத்தத்தில் கலக்கும்படி செய்கின்றன. அவைகள் உள்ளக் கிளர்ச்சிகளால் உடம்பிலும் செயலி லும் ஏற்படும் மாறுதல்களுக்குக் காரணமாக இருக் கின்றனவென்று கண்டிருக்கிரு.ர்கள். ஆட்ரீனல் என்ற சுரப்பி சிறுநீர்ப் பைக்கு மேலே இருக்கிறது. வலி, அச்சம், சினம் ஆகிய கிளர்ச்சிகளால் அந்தச் சுரப்பி பாதிக்கப்படுகிறது என்றும், செயற்கை முறையிலே அச் சுரப்பி நீரை ஒருவனுடைய இரத்தத்தில் சேரும்படி செய்தால் அச்சத்தால் ஏற்படும் உடல் மாறுபாடு களெல்லாம் உண்டாகிறதென்றும் கானன் என்பார் ஆராய்ந்து கண்டிருக்கிரு.ர். இவ்வாறே மற்றச் சுரப்பி களின் தன்மைகளையும் ஆராய்ந்து கூறியிருக்கிரு.ர். சுரப்பிகள் அல்லது மற்ற உடல் உறுப்புகளின் செய்கைகளால் உள்ளக் கிளர்ச்சிகள் தோன்றுவ தானுலும் அல்லது உள்ளக் கிளர்ச்சிகளால் உறுப்புக் களின் செய்கைகள் மாறுபாடடைவதானுலும் மனித