பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மனமும் அதன் விளக்கமும் அடுத்த நாற்பது ஐம்பது ஆண்டுகளில் இந்த மெஸ் மரிசகமுறையைப்பற்றி ஐரோப்பிய நாடுகளில் மிக விரிவான் ஆராய்ச்சிகள் நடந்தன. பத்தொன்பதாம் நூற்ருண்டின் இடையில் பிரிட்டனில் மான்செஸ்டரில் ஜேம்ஸ் பிரெய்டு என்ற ஒரு புகழ்பெற்ற மருத்துவர் இருந்தார். அவர் மெஸ்மரிசத்தைப்பற்றி ஆராய்ந்து டாக்டர் மெஸ்மர் கூறியபடி மனவசியம் செய்பவரிட மிருந்து காந்த சக்தி ஒன்றும் பாய்வதில்லை என்பதை நிரூபித்தார். மன ஆற்றல் மிகுந்த யாரும் வேருெரு வரை உறக்கம் போன்ற ஒரு நிலையில் ஆழ்த்த முடியும் என்றும், அந்த நிலையிலேயே ஏவியவாறு செய்யும்படி தூண்டவும் முடியுமென்றும் அவர் காட்டினர். மன வசியம் செய்து அதன் மூலம் நல்ல பயன்களை உண் டாக்கலாம் என்பதை உணர்ந்துகொண்டால் மன வசியம் செய்வோருடன் மனவசியம் செய்யப்படுப வரும் ஒத்துழைப்பார். இந்த ஒத்துழைப்பு மிகவும் தேவையாகும். மனவசியம் செய்பவருடன் வைத் துள்ள நம்பிக்கையே வசியப்படுத்துவதற்கு அடிப் படையாகும். முழு ஒத்துழைப்புக் கிடைக்காதபோது வசியப்படுத்துவது பெரும்பாலும் இயலாது. வசியமடைய வேண்டியவரை எளிதில் உறங்கு மாறு செய்ய அதற்கேற்ற அமைதியான சூழ்நிலையை அமைத்து வசியம் செய்பவர் தம்மையோ அல்லது ஏதேனும் ஒரு பளபளப்பான பொருளையோ இமை கொட்டாமல் பார்க்கும்படி செய்வது உறக்கநிலை ஏற் படுவதற்கு முதற்படியாகும். பிறகு முகத்தையும், மார்பையும் மெதுவாக வருடிவிட்டுக்கொண்டே, 'உறங்கு; நீ இதோ உறங்கப்போகிருய். உறங்கப் போகிருய். உறங்கியாகிவிட்டது' என்று கூறுவது இரண்டாவது படி. இவற்றின் பயனக வசியம்