பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மனமும் அதன் விளக்கமும் யிட்டார். நனவிலி மனம் முற்றிலும் பாலியல்பு வாய்ந் தது என்பதை இவர் பிற்காலத்தில் ஒப்புக்கொள்ள வில்லை. லிபிடோ என்பது மனிதன் உயிர் வாழ விரும் பும் ஆர்வத்தையே குறிக்கிறது என்று இவர் கருதினர். மேலும் பிராய்டு குறிப்பிட்ட இனம் அல்லது தொகுப்பு நனவிலி மனத்தைப்பற்றி இவர் விரிவாக ஆராய்ந்து பல புதிய கருத்துகளை வெளியிட்டார். யுங்கின் கொள்கைப்படி நனவிலி மனத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. சமூகம் ஏற்றுக்கொள்ளாத இச்சைகள் அனு பவங்கள் ஒரு பகுதியில் இருக்கும். மற்ருெரு பகுதியில் அவனுடைய மூதாதையர் அனுபவங்களும், அவர் களுடைய இச்சைகளும் மறைந்து கிடக்கும். யுங்கின் மற்ருெரு முக்கியமான கருத்து'நனவு மனத்திலிருந்து நணவிலி மனம் தோன்றவில்லை; ஆனல் நனவிலி மனத்திலிருந்தே நனவு மனம் தோன்றுகிறது” என்ப தாகும். உடல் அமைப்பு எவ்வாறு ஒருவனுடைய மூதாதையரின் உடலமைப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதோ அதேபோல அவனுடைய மனத் தின் அமைப்பும் மூதாதையரின் மன அமைப்பைப் பொறுத்திருக்கிறதென்று யுங் கூறுகிருர். மனிதன் ஒரு பெரிய வண்டியைப் போன்றவன்; அந்த வண்டி அவ னுடைய மூதாதையரை யிெல்லாம் சுமந்து செல்கிறது என்று இதை விளக்கிச் சொல்வதுண்டு. நனவிலி மனத்தைப் பற்றி இவ்வாறு இரண்டு பகுதிகளாகக் கூறும்போது இங்கும் தனித்தனியாக இரண்டு பகுதிகள் இருப்பதில்லை யென்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மனத்தில் நனவு மனம், நனவிலி மனம் என்று தனித்தனிப் பகுதிகள் இல்லை என்று முன்பு அறிந்துகொண்டதைப் போலவே இங்கும் அறிந்துகொள்ள வேண்டும்.