பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன கனவிலி மனம் 91 பெரிய நகரங்களில் புதிய சூழ்நிலைகளில் வாழவேண்டி யிருக்கிறது. அவசரமும், பரபரப்பும், வேகமும் மிகுந்த இந்த வாழ்க்கையானது அவனுடைய அமை திக்குப் பாதகமாக நின்று புதிய புதிய மனக்கோளாறு களையும் மனநோய்களையும் விளைவிக்கின்றன. நாட்டுப் புறங்களிடையே வாழும் மக்களிடையேயும், ஆதிவாசி களாக உள்ள மக்களிடையிலேயும் இத்தகைய கோளாறுகள் காணப்படினும் நகரத்தின் நாகரிக வாழ்க்கையில் உள்ளவர்களிடையே காணப்படுதைப் போல அத்தனை மிகுதியாக இக்கோளாறுகளை அவர் களிடையே காண முடியாது. நரம்புக் கோளாறுகளையும், படபடப்பையும் கட்டுப் படுத்துவதற்கென்று நரம்புகளுக்கு மயக்கத்தை அளிக் கும் பலவகையான ம ரு ந் து க ள் இக்காலத்தில் தோன்றியுள்ளன. உறக்கத்திற்காக உட்கொள்ளும் மாத்திரைகள் இல்லாவிட்டால் இன்று பலரால் இரவிலே உறங்கவே முடியாது என்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே இந்த நிலைமை மாற வேண்டுமானல் மன அமைதிக்கான வழிகளை நாம் பின்பற்றவேண்டும். தியானம் என்பது மனத்திற்கு மிகப் பெரிய அமைதியளிக்கும் சாதனம் என்று ஞானிகள் பழங்காலத்திலிருந்தே கூறியுள்ளார்கள். இன்று மஹரிஷி மஹேஷ் யோகி என்ற பெரியார் இமயமலைச் சாரலிலே தியான நிலையம் ஒன்றை அமைத்து மக்களுக்குத் தியானத்தின் பெருமையை உணர்த்த முற்பட்டிருக்கின்ருர். எளிதாக எல்லாரும் பின்பற்றக்கூடிய தியான முறையை அவர் வகுத்து அதில் மக்களுக்குப் பயிற்சியளித்து வருகிரு.ர். . உலகி லுள்ள பலநாட்டு மக்களும் அந்நிலையத்திற்கு வந்து பயிற்சி பெறுகிரு.ர்கள்.