பக்கம்:மனமும் அதன் விளக்கமும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மனமும் அதன் விளக்கமும் ஏற்படலாம். ஆளுல் அப்பொழுதெல்லாம் மனக் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயலவேண்டும். மனக் கிளர்ச்சியால் ஏற்படும் அதிர்ச்சிகளும் ஏற்படாதவாறு கட்டுப்ப்டுத்த வேண்டும். அவை மனத்தின் நலத்தைக் குலைப்பதோடு உடல் நலத்தையும் கெடுக்கும். பெற் ருேர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு இளமையி லிருந்தே இவ்விதமான பழக்கத்தை உண்டாக்குவது இன்றியமையாதது. மனநலத்தை வளர்ப்பதற்குப் பல வழிகளைக் கூறலாம். சமூகச் சூழ்நிலையோடு இணைந்து நடப்பது, துன்பத்தின் காரணத்தை அறிய முயற்சி செய்தல், மனக்கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல், வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளையும், ஏமாற்றங்களையும் நகைச் சுவை உணர்ச்சியோடு களைய முயலுதல், சோம்பலைத் தவிர்த்தல், நாள்தோறும் செய்யும் செயல்களை ஒழுங் காகத் திட்டப்படுத்துதல், கடமைகளையும் பணிகளையும் செய்வதில் பற்றுக்கொள்ளுதல், அவ்வாறு பற்றுக் கொள்வதால் துன்பங்களை மறத்தல், பகற்கனவாலும் பயனற்ற எண்ணங்களாலும் மனநிறைவை அடைய முயலாதிருத்தல், செய்வதைத் திருந்தச் செய்வதில் இன்பங் காணுதல் முதலானவைகள் எல்லாம் நல்ல மனநலத்திற்குச் சிறந்த அடிப்படைகளாகும். மன நலம் சிறந்திருப்பதே ஒருவனுடைய வாழ்க்கையின் வெற்றிக்கு நல்ல அறிகுறியாகும். விட்டிலும், தொழில் செய்யும் இடங்களிலும் சமூகத்திலும் நாம் விரும்பியவாறே எல்லாம் நடைபெறும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தன மாகும். அவ்வாறு நடைபெறுவதற்கு வேண்டிய நேர்மையான முயற்சிகளை ஒருவன் கைக்கொள்ளலாம்: ஆனல் அவற்றை விட்டுவிட்டு மனத்தை அலட்டிக்