பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 0.3 முன்பிருந்த தமிழ்மாந்தர் பெண்ணி னத்தின் முதன்மைக்கு மதிப்பளித்துப் போற்றி வந்தார்: அன்பிருந்த காரணத்தால் ஆண்மை பெண்மை அவ்விரண்டும் சமமென்று நினைந்து வாழ்ந்தார்: நன்குனர்ந்த அவ்வைமுதல் மகளிர் தம்மை நாட்டிலுயர் அரசரெலாம் மதித்து வாழ்ந்தார்: பின் பிறந்தார் எப்படியோ பேத லித்தார் பெண்ணினத்தை வேதனைக்குள் வீழ்த்தி விட்டாசி. கற்புக்கும் பண்புக்கும் இல்ல றத்தின் காப்புக்கும் கண்ணகித்தாய் சான்றாய் நின்றாள்: பொற்புக்கும் நற்கலைக்கும் தன்ன லத்தைப் போக்குதற்கும் மாதவித்தாய் சான்றாய் நின்றாள்: அற்புக்கும் அருளுக்கும் ஆசை எல்லாம் அடியோடு துறந்ததற்கும் சான்றாய் இங்கு நிற்றற்கு மேகலைபோல் யாரே உள்ளார்? நேரிழையார் பெருமைசொல இவரே போதும். அன்னையொடு தந்தையையும் தெய்வ மென்றார் : ஆண்டவனை விளித்தவரோ அம்மே அப்பா என்னவொரு பாவுரைத் தார்; சத்தி யாகிச் சிவமாகி என்றவொரு பாட்டும் உண்டு; முன்னையவர் மொழிந்தவற்றை உற்று நோக்கின் முதலிடத்தைப் பெண்மைக்கே அளித்தி ருந்தும் பின்னையவர் ஏன் மறுத்தார்? பெண்மைக் கேனோ பிழைபுரிந்தார்? பிறபண்பின் நுழைவோ? யாதோ? ટ}\ 2 - = ક), ઝી 나