பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 05 கற்றறிந்த மகளிர்சிலர் திரும ணத்தைக் கடிந்தொதுக்கக் காண்கின்றேன்: கணவ னுக்கோர் உற்றடிமை ஆவதுவோ? பிள்ளைப் பேறாம் உறுதுயரால் சாவதுவோ? அடிமை அல்லோம்: . பெற்றவர்சொற் படி நடவோம் ' என்றே ஆர்ப்பர்: பெண்ணினமே திருமணத்தை வெறுத்து விட்டால் அற்றுவிடும் மாந்தரினம்; பிறப்பே இல்லை அன்னை நிலைக் கஞ்சுவதோ? இயல்போ ஈது? மண்ணுரிமை வேட்டவர்தாம் வீரங் கொண்டு மறப்போரைத் தொடங்கிடுவர் முறையும் ஆகும்; பெண்ணுரிமை வேட்டெழுந்தோர் ஆண்மை யோடு பெரும்போரைத் தொடங்குவது முறைமை யாமோ? கண்ணுரிமை வேட்டெழுந்தே இமைக ளோடு கடும்போரைத் தொடங்கிடுமேல் விளைவென் னாகும் பெண்ணுரிமை யாதென்னில் அடிமை யின்றிப் பேரன்பாற் சரிநிகராய் வாழ்தல் ஆகும் மென்மையைத்தான் பெண்மையென உலகம் பேசும் மெல்லியலார் இவ்வுண்மை உணர்தல் வேண்டும்: வன்மையைத்தான் ஆண்மையென நவில்வர் மேலோ: வாய்ப்பிதனால் கடமைகளும் வேறு வேறாம்; நன்மையைத்தான் நாடுகின்ற நங்கை யர்க்கும் . நடைமிகுந்த காளையர்க்கும் உரிமை ஒன்றாம்: புன்மையைத்தான் விட்டொழித்துச் சமமாய் நின்று புத்துலகப் பயணத்தைத் தொடங்கல் நன்றாம்.