பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 பெற்றெடுத்த பிள்ளையினைத் தொட்டு ணர்ந்து பெறும்பயனைப் பெற்றிலதேல் என்ன கையோ? சிற்றுருவப் பொற்சிலையைத் தூக்கித் துக்கித் திளைத்தின்பம் அடையாத்தோள் என்ன தோளோ? முற்றிவரும் செழுந்தேனைப் பொழியும் வாயின் முத்தங்கள் பெற்றிலதேல் என்ன கன்னம்? கற்றவர்க்கும் பொருள்விளங்கா மழலை கேளாக் காதினர்க்குச் செவியிருந்தும் பயன் தான் என்ன? உழைத்தலுத்து வருவோர்க்குக் களைப்பை நீக்கி உள்ளத்துக் கவலைக்கும் மருந்தாய் நிற்கும்; பிழைப்புக்கு வழியறியாக் குடிலுக் குள்ளும் பெருஞ்செல்வங் குவிந்தமனைக் குள்ளும் அன்பு தழைத்திருக்க ஏற்றிவைக்கும் ஒளிவி ளக்காம்; தவழ்ந்துவரும் மகவிலையேல் எந்த வீடும் செழித்திருக்கக் கண்டதிலை இருண்டே தோன்றும்; சிரிப்பொலியின் எதிரொலியும் கேட்ப தில்லை. இசையினிமை பயக்கும்.யாழ் பிள்ளை என்றேன்; எல்லையின்றிப் பெறின் வாழ்வே உடைந்த யாழாம்; நசைமிகுந்த பேசும்பொற் சிலையைக் கொண்ட நல்லதொரு வீடொன்றே கோவில் என்றேன்; திசைகடந்து வரம்பதனை மீறி விட்டால் சிதறுண்டு பாழ்பட்ட மண்ட பந்தான்; பசிமிகுந்த கூக்குரலே கேட்கும் அங்கே பண்ணொலியோ யாழொலியோ கேட்ப தில்லை.