பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 உலகத்தை ஒருகுடைக்கீழ் ஆள எண்ணி ஒவ்வாத போர்வெறியர் உலகில் யாண்டும் கலகத்தை விளைவித்துப் போர ரக்கன் கடுவாயில் போய்வீழ்ந்தார்; அவரை எல்லாம் இலவுக்குக் காத்திருந்த கிளிபோ லாக்கி ஏலாத பேராசை உள்ளத் துாட்டி நலமழித்த நிலமகளை எப்பேர் சொல்லி நானழைப்பேன்? மாபாவி என்ப தல்லால், பாவமவள்! நிலமகளா குற்றஞ் செய்தாள்? பாராள வந்தவர்தாம் குற்றஞ் செய்தார்; யாவுமவர் ஆசையினால் வந்த தீமை அதற்கவளா பொறுப்பாளி? இல்லை இல்லை; காவலர்கள் பிறர்க்குரியாள் தோள்வி ழைந்தார் கருத்தழிந்தார் உருத்தெழுந்தார் தாமே மாண்டார்; மேவுகின்ற ஆடவர்தாம் நல்ல ரானால் மெல்லியலாம் நிலமகளும் நல்லள் ஆவாள். நிலமகளின் ஆசையினாற் கொடிய மாந்தர் நெடுகிலுமே செய்தீமைக் களவே யில்லை; பலவுயிரும் பலபொருளும் பிறப்ப திந்தப் பரந்துபடும் நிலத்திற்றான்; பின்னர் அந்தக் தலமுழுதும் மறைந்தொடுங்கி மாய்வ தெல்லாம் கூறுமிந்த நிலத்திற்றான்; இதைம றந்து நிலமுழுதும் தாமுண்ண முயலு கின்றார் நிலையாகத் தமதென்றும் எண்ணு கின்றார். பிறர்க்குரியாள் - பிறர்க்குரியநிலமகனை எ1