பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பெரும்பொருளும் உயர்மனையும் வயலும் இன்னும் பேறனைத்தும் பெற்றாலும் இறுதிக் காலம் வரும்பொழுது மனிதனுக்குச் சொந்த மென்று வாய்த்தநிலம் ஆறடி தான்; அதைம றந்து வரும் மனிதன் வாழ்வெல்லாம் பிறர்நி லத்தை வளைப்பதற்கே முயல்கின்றான்; வளைத்த பின்னும் அரும்புகிற ஆசையைத்தான் காட்டு கின்றான் ஆசைக்கோர் அளவில்லை அதனாற் போலும். தோண்டுங்காற் பொன்தருவாள் சோர்வ கற்றித் துளைத்தெடுத்தால் தந்திடுவாள் எண்ணெய், மேலும் வேண்டுங்கால் நிலக்கரியும் ஈவாள்; ஆழ வெட்டுங்கால் புனல்தருவாள்; ஆழ்ந்த கழ்ந்து கீண்டுங்கால் இரும்புமுதற் கணிக ளெல்லாம் கிடைக்க அருள் நல்கிடுவாள்; ஏர்மு கத்தால் தீண்டுஞ்சால் வழியெல்லாம் பயிர்கள் காட்டிச் செழித்திருப்பாள் வளமெல்லாம் கொழித்தி ருப்பாள். கனிதருவாள் காய்தருவாள் வாழும் வண்ணம் காலமெலாம் உயிர்தருவாள்; உடல்வ ருத்தி இனிதருளும் ஈகையினால் அவளை வள்ளி எனுஞ்சொல்லாற் புகழ்ந்துரைக்க ஆசை தோன்றும் நனிமுயன்றே பாடுபடின் பொருளை வாரி நல்கிடுவாள்; உழைப்பின்றி அயர்ந்து நின்றால் முனிவுகொடு பொருள்குறைப்பாள்; உழைப்ப றிந்து; முதல்கொடுக்கும் முதலாளி என்றுஞ் சொல்வேன்; - வள்ளி-வள்ளன்மையுடையவள்