பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 நமக்கென்றே இருப்பவளை வாழ்நா ளெல்லாம் நலிவுறுத்தி வருகின்றோம்; தலையி டத்துச் சுமக்கவென மரம்வைத்தோம் மனைகள் கட்டத் தாண்வைத்தோம் கல்வைத்தோம் காலும் வைத்தோம் எமக்கென்ன என்றவள்மேல் உமிழு கின்றோம் இரும்பெடுத்தே அவளுடலை அகழு கின்றோம் சுமக்கின்றாள் பொறுக்கின்றாள் பொறுமை சாலி தொழிலாளி போலிருக்குந் திறமை சாலி. கடல்சுமந்தாள் மலைசுமந்தாள் கான்சு மந்தாள் கால்நடைகள் பலசுமந்தாள் மாந்தர் என்ற உடல்சுமந்தாள் வயல்சுமந்தாள் நதிக மந்தாள் ஊர்சுமந்தாள் நகர்சுமந்தாள் செடிசு மந்தாள் குடல்சுமந்து பெற்றெடுத்த அன்னை யில்லாக் குலப்பிள்ளை போலாகி நின்றாள் அந்தோ! மிடல்சுமந்த அவளுருத்துச் சினந்து நின்றால் மேலாளர் வாழ்வெங்கே அவளே வெல்வாள்.