பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 ஆண்டவன்முன் இவ்வண்ணம் வேண்டி நிற்கும் அடியர்பலர் கோவிலுக்கு வந்து செல்வர்; ஈண்டவர்தம் செயலெல்லாம் பக்தி என்றால் இனியுலகம் ஏற்காது வெறுத்துத் தள்ளும்; வேண்டுகிற பரிசிலது மற்ற வர்க்கு விழவேண்டா என்னுந்தன் னலமா பக்தி? காண்டகுநல் லின்பமெலாம் வையம் பெற்றுக் களித்திடுக என்பதன்றோ பக்தி யாகும் கையூட்டுத் தருவதுவா கடவுள் பக்தி: காசுபணம் தந்ததனால் பங்குக் காக நெய்யூற்றும் விளக்கொன்று தரலா பக்தி? நினைந்தழுங்கும் காசுபண வெறியா பக்தி? பையூட்டம் பெறுவதற்குக் கடவுள் முன்னே பத்துலட்சம் பத்துலட்சம் எனலா பக்தி: பொய்யூட்டும் வாணிகத்தைக் கோவி லுக்குள் புகுத்துவதும் ஏய்ப்பதுமா நல்ல பக்தி? முற்றிநலம் பழுத்திருக்கும் அன்பி னைத்தான் மொழிந்திடுவர் பக்தியென உணர்ந்த 56ು|arಗೆ e/ பற்றியெழும் அவ்வன்பால் உளமு ருக்கிப் பண்படுத்திக் கொள்வதுதான் பக்தி புகும்: r/ பற்றுடனே மாந்தரிடம் அன்பு செய்யப் பயிலாமல் கடவுளுக்குப் பூசை செய்தால் உற்றவனும் ஏற்பதில்லை; உலகந் தானும் ஒருபோதும் பக்தியெனக் கொள்வ தில்லை.