பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 குற்றஞ் செறிந்தகவி கொட்டித் திரிபவரைச் செற்றமிகக் கொண்டு செவியை அறுப்பதற்குங் குட்டுதற்கும் வெட்டுதற்கும் கூறும் அவர்சொல்லைத் தட்டுதற்கும் ஆளில்லை என்ற தருக்காலோ பாட்டுலகைப் பாழ்படுத்திப் பாடித் திரிகின்றார்? கேட்டைக் களையக் கிளர்ந்தெழுவார் இல்லை.எனில் பாட்டுந் தமிழும் பரவும் இலக்கியமுங் கேட்டுக் கிலக்காகிக் கீழ்நிலையிற் போய்வீழும்; விழுநிலை வந்து விடுமோ என மயங்கிச் சூழும் புகழ்க்கம்பன் துன்பத்தால் வெம்பிடுவான்; அண்டை மொழிக்ைேற்கள் அருமைத் தமிழ்மொழிக்குள் ஒண்டEஇடகின்.ே ஒலிக்கும் மரபறிந்து சொல்லும் முறைதெரிந்து சொல்லினான் நம்கம்பன்: புல்லுங் கவிபுனைவோர் புக்கமொழிச் சொல்லை.எலாம் அள்ளிச் செருகி அயன் மொழியின் ஒசைதனச் of சொல்லிக் கதைக்கின் ருர் சொன்னாலும் புரிவதிலை: ό/ செம்மொழியாம் நம்மொழிக்குச் சேயாய்ப் பிறந்திருந்தும் எம்மொழிதான் வந்தாலும் ஏத்தித் துதிக்கின்ற பேதை மனத்தவராய்ப் பேரால் தமிழரென்பார் தீது வரும்நிலையில் செந்தமிழைக் கண்டாலும் ஏதும் அறியா திருக்கின் ருர் பேரளவில்: ஒதுந் தமிழின் உயர்வொன்றும் எண்ணுகிலார்; தாய்மொழிக்குத் தன்னுரிமை தாராத வன்கொடுமைப் பேய்நிலையைக் கண்டபினும் பேசா திருக்கின்றார்; இத்தகுநன் மாந்தர்தமை எம்.கம்பன் காணுங்கால் 'பித்தரெனத் தக்க வரைப் பிள்ளை எனப் பெற்றாளே!