பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 அவர் தலை மறைந்ததும் நட்சத்திரத்தைத் துக்கி நாற்காலியின்மேல் உட்கார வைத்துவிட்டு, மின்சார விசிறியின் 'ஸ்விட்'சைத் தட்டிவிட்டார் படாதிபதி. இதனால் விரலோடு உச்சியுங் குளிர்ந்த லீலா, 'தாங்ஸ், உங்களுக்கு ரொம்பச் சிரமம் கொடுத்துவிட்டேன்!” என்றாள். 'சரியாப் போச்சு, உன்னைத் தொட்டுத் துரக்க என்னை அனுமதித்த உனக்கு நானல்லவா தாங்ஸ்' சொல்ல வேண்டும்!” என்றார் பத்மனாபன். பதிலுக்கு விலை உயர்ந்த சிரிப்'பொன்றைப் போனாற் போகிறதென்று உதிர்த்தாள் நட்சத்திரம். அவ்வளவுதான்; வந்தது மோசம் - படாதிபதியை யாரோ, எங்கேயோ மேலே மேலே தூக்கிக் கொண்டு செல்வது போலிருந்தது. 'நான் எங்கே இருக்கிறேன்? எங்கே போகி றேன்?' என்று அப்படியும் இப்படியுமாக அசைந்தசைந்து தடுமாறினார். நட்சத்திரம் திடுக்கிட்டெழுந்து, 'இங்கேயேதான்; என் பக்கத்திலேயேதான்!' என்று அவரைத் தாங்கிப்பிடித்தாள். 'ஆஹா, தன்யனானேன்! இனி எனக்கு இன்னொரு ஜன்மம் வேண்டியதில்லை; வேண்டியதேயில்லை - இதுவே ஏழாவது ஜன்மமாயிருந்துவிட்டுப் போகட்டும், ஏழுமலையானே!' என்று வேண்டிக்கொண்டார் பத்மனாபன். அந்தச் சமயத்தில் முன்னாலும் பின்னாலும் பார்த்துக் கொண்டு, எதையோ வேஷடியில் மறைத்து மறைத்து எடுத்துக்கொண்டு, ஒதுங்கி ஒதுங்கி உள்ளே வந்தான் பீதாம்பரம். 'என்னடா, அது?' என்று அதட்டினார் படாதிபதி. 'அதாங்க, அம்மா ரொம்பக் களைப்பாயிருக்காங் களேன்னு...” 'ஒ, அதுவா? - என்ன இருந்தாலும் நீ புத்திசாலிடா! சோடா கலந்தாயா?” என்று வாயெல்லாம் பல்லாகக் கேட்டார் படாதிபதி பத்மனாபன். அதற்குள், 'வேண்டாம் சோடா, எனக்கு 'ராவாவே குடித்துத் தான் பழக்கம்!' என்றாள் நட்சத்திரம் குறுக்கிட்டு.