பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 & f : . 'பார்த்தீர்களா, எனக்குத் தெரியுமே!’ என்று கிளாஸ்ை 'அம்மா'விடம் நீட்டிவிட்டுப் பீதாம்பரம் கையைப் பிசைந்தபடி வெளியே சென்றான். அவள் அதில் ஒரு மொடக்கு குடித்ததும் அதை அப்படியே தன் வாயில் தயவு செய்து உமிழுமாறு அவளை வேண்டிக் கொண்டார் பத்மனாபன். 'புனிதமடைந்து போகட்டும்’ என்று அந்த 'அம்மாளும் அப்படியே செய்தாள். 'இன்று என்னமோ தெரியவில்லை; நான் நரி முகத்தில்தான் விழித்திருக்க வேண்டும்' என்றார் படாதிபதி. - மறுபடியும் தன் விலை உயர்ந்த சிரிப்'பொன்றைக் கலகலவென்று உதிர்த்தாள் லீலா. இப்போது ஒருவரை மட்டுமல்ல; இருவரையுமே யாரோ எங்கேயோ தூக்கிக் கொண்டு மேலே மேலே, மேலே மேலே செல்வதுபோலிருந்தது. அந்த நிலையிலேயே மிதந்தபடி அவளுக்கு முன்னால் மண்டியிட்டு முழங்கால்களின்மேல் தலையை வைத்துக் கொண்டு, 'வெள்ளை - பாக்கெட்டில் கிடைக்காத என் ஒயினே, இன்று ஏன் இவ்வளவு அவசரம்?' என்று பத்மனாபன் நாக்குழறக் கேட்டார்.

  • *

என் பிளாக்-மார்க்கெட் பணமே, இன்று நான் ஸ்பென்ஸருக்குப் போக வேண்டுமென்று இருந்தேன். அதனால் தான்...' { "எதற்கு என் ஒயினே, இந்த அடிமையிடம் சொல்லக் கூடாதா?’’ ‘'வேறொன்று மில்லை, ஸ்பான்ஜ் ஒன்று வாங்க வேண்டும்...' 'இவ்வளவுதானே? - என்னிடம் நாவசைத்தால் போதாதா?’’ 'அசைக்கலாம் என்றுதான் இருந்தேன்; நாளைக் காலையி லேயே அது வேண்டியிருந்ததால் தாமதமாகுமோ என்று பயந்தேன்!' நான் இருக்கப் பயம் ஏது? ஒரு வார்த்தை சொன்னால் பொழுது விடிவதற்கு முன்னாலேயே கையில் 'ஸ்பான்ஜ்'ஜூடன்