பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 · ·ვვ! 'ரைட்டோ! - அவனைப் பற்றி நீ ஒன்றும் 'வொரி' பண்ணிக்காதே - வயது அறுபதுக்கு மேலிருக்கும். 'டிஸ் யூ லாரி'யைக் கட்டிக்கொண்டு ரீடா ஹேவொர்த் 'ஸ்டை'லிலே ஒரு 'போஸ் கொடுத்தால் போதும், பய அப்படியே சொக்கி, 'மங்க்கி கிலாண்ட் இன்ஜக்ஷன் மேலே இருந்த நம்பிக்கையையெல்லாம் விட்டுவிட்டு, பஞ்சகச்சத்தை இறுக்கியிறுக்கிக் கட்டிக்கொண்டு எடுப்பான் ஒட்டம்' 'ஹீ ஹ் ஹி ஹ் ஹீ ஹீ - உங்களுக்கு மட்டும் வயது பதினாறோ? - வாருங்கள், இன்னும் கொஞ்ச நேரம் இருந்து நான் "ஷல்ட்டிங்'கை முடித்து விட்டுப் போகிறேன்!” ‘'வேண்டாம் நீ போய் 'ரெஸ்ட் எடுத்துக் கொள்; நான் வடி ட்ெடிங்கைக் 'கான்ஸல் செய்துவிடுகிறேன்!' இந்தச் சமயத்தில் நிசிலிலாவுக்கு ஏதோ ஆக்ஸிடெண்ட்” என்று கேள்விப்பட்ட 'ஜாலிவுட் ப்ரொட்யூலர்'களில் சிலர் அங்கே ஒடோடியும் வந்து, 'என்ன லீலா, என்ன நடந்தது?' என்று அவளைச் சூழ்ந்து கொண்டு, அங்கம் அங்கமாகத் தொட்டுப் பார்த்தார்கள். 'ஒன்றுமில்லை; டாக்டர் ட்ரீட்மெண்ட்'டுக்கு அப்பறம் எல்லாம் சரியாப் போச்சு!' என்று மழுப்பிக்கொண்டே, அவர்களுடைய 'அனுதாபத்திலிருந்து தப்ப நட்சத்திரம் விலகி விலகி நின்றாள். அடிபட்டவன் "லைட் பா’யாயிருந்தால் அது விஷயம் வேறே! - நட்சத்திரத்தின் விஷயத்தில் அப்படி இருந்துவிட முடியுமா? - 'பின் ஏன் ஷாட்ெடிங்கைக் கான்ஸ்ல் செய் கிறீர்கள்?' என்று அவர்கள் குடைந்தார்கள். தர்மசங்கடமாகப் போய்விட்டது பத்மனாபனுக்கு. ‘'வேறொன்றுமில்லை ஐயா, ஸ்பான்ஜ் வாங்க ஸ்பென் ஸ்ருக்குப் போக வேண்டுமாம்; அதற்காகத்தான்...' என்று இழுத்தார். அதைச் சொல்லி அவர் வாய் மூடுவதற்குள், எத்தனை டஜன் வேண்டும்? - இதோ, நான் இப்போதே போய் வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன்!” என்று கிளம்பினார் ஒருவர்.