103 'உம்முடைய காரைச் சொல்லும், அடிக்கு ஆயிரம் தடவை நிற்கும் - நானே போய் வாங்கிக் கொண்டு வந்துவிடுகிறேன்!” என்று துடித்தார் இன்னொருவர். மற்றொருவர், அடாடா! இந்தச் சமயத்தில் 'லோகலுக்கு ஏரோப்ளேன் ஸர்விஸ்' மட்டும் இருந்திருந்தால் இந்நேரம் நான் அதில் பறந்தே போயிருப்பேன்!' என்றார் கைகளைத் தூக்கித் துக்கிக் காட்டி. 'கடவுள் வஞ்சனைக்காரன், ஸார் காக்கைக்கும் கருடனுக்கும் கொடுத்த சிறகுகளை எனக்கு மட்டும் கொடுத்திருந்தால்...?’’ 'என்ன பிரயோசனம்? ஸ்பென்ஸ்ரைத்தான் இந்நேரம் மூடியிருப்பார்களே!' என்றார் பொறுமையிழந்த பத்மனாபன் குறுக்கிட்டு. அதற்குள் ஏதோ ஒரு கார் கிளம்பும் சத்தம் கேட்கவே, எல்லோரும் ஏககாலத்தில் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். 'என்றும் அழியாத கன்னி'யான மிஸ் லீலா அந்தக் காரில் இருந்த படித் தலையைக் கொஞ்சம் வெளியே நீட்டி, 'குட் நைட் !' என்று அத்தனை பேருக்கும் சேர்ந்தாற்போல் படுகிக்கனமாக ஒரே வார்த்தை சொல்லி வைத்தாள். 'அட்சர லட்சம் பெறும் அந்த வார்த்தையைக் கேட்டு ஓரளவு உச்சி குளிர்ந்தாலும் பத்மனாபன் விடவில்லை. "ஒன் மினிட், ஒன் மினிட்' என்று கத்திக்கொண்டே காரை நோக்கி ஓடினார். மற்ற படாதிபதிகளும் அதே கூக்குரலுடன் அவரைப் பின் தொடரவே, நட்சத்திரம் பயந்துபோய்க் காரை நிறுத்தவில்லை! என்ன இருந்தாலும் பெண்தானே? எத்தனை 'சைத்தான்' களுக்குத்தான் ஈடு கொடுப்பாள்? & • ** శ్మి* •,• நேற்று அடைந்த இந்த ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்காகத்தான் இன்று எல்லாப் படாதிபதிகளுக்கும் முன்னால் பத்மனாபன் ஸ்பென்ஸருக்கு வந்திருந்தார். இதை அறியாத ஓ.கே. பத்மனாபன் வருவதைக்கூடக் கவனிக்காமல் ஒருவர் பின் ஒருவராகக் காரில் வந்து இறங்கும் 'ஜாலிவுட் ப்ரொட்யூஸர்களுக்கெல்லாம் 'ஸல்யூட் அடித்துக் கொண்டிருந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? - 'ஏய் இடியட், எட்றா வண்டியை!' என்று இரைந்தார்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/105
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை