105 இவள் யார் என்கிறீர்களா? - இவள் தான் பிரபல நட்சத்திர மான நிசிலிலாவின் தாயார். பூர்வாசிரமத்தில் 'குப்பச்சி'யாக இருந்து, பிற்காலத்தில் ‘குஞ்சம்மா ளாகப் புனர்ஜன்மம்' எடுத்தவள். 'ஏய், எட்டிப் போடா!' 'உங்கப்பன் வீட்டு ரோட்டா! - நட்ட நடுவே நிற்கிறயே!” յ , » 'டிரிங், டிரிங்.... டிரிங், டிரிங்...! 'ഞഇ ഞഇ...ങ്ങഈ ങ്ങഈ ഞഈ...' "!... یا لاا و یا .... یا لاا والیا" ஏற்கெனவே 'தன் பருவ கால நினைவுகள்' கலைந்த கோபத்தோடு பஞ்சனையின்மேல் உட்கார்ந்திருந்த குஞ்சம் மாளுக்கு மேற்படி குரல்களையும் 'விஸில்"களையும் கேட்டதும் ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்து விட்டது. அப்பொழுதும் அவள் மறக்காமல் வைரக் கம்மல்களைக் கழற்றி அவசரம் அவசரமாகத் துடைத்துப் போட்டுக் கொண்டு வராந்தாவுக்கு வந்தாள்; வாசல் பூராவும் ஒரே கார் மயமாக இருந்தது - ஒன்றையொன்று முந்தி உள்ளே நுழைய அவை போட்டியிட்டுக் கொண்டிருந்தன. அவற்றைக் கடந்து மேலே செல்ல முடியாமல் மாட்டு வண்டிகளும் ஜட்கா வண்டிகளும், சைக்கிள்களும் ரிக்ஷாக்களும் தவித்துக் கொண்டிருந்தன. போக்குவரத்துப் போலீஸார் அடிக்கடி 'விஸில் அடிப்பதும், நம்பர் வாரியாகக் கார்களை அழைத்து வரிசைக் கிரமமாக அவற்றை நிறுத்தி வைப்பதுமாக இருந்தனர். 'ஏன் இந்தக் கூட்டம், ஏன் இந்த ரகளை?' - ஒன்றுமே புரியவில்லை, குஞ்சம்மாளுகாகு! அதிலும் வருபவர்கள் சாதாரண ஆசாமிகளா யிருந்தாலும் பரவாயில்லை; படே படே ப்ரொட்யூலர்கள்! - அவர்களை எப்படி வரவேற்பது? அத்தனை பேரையும் எங்கே உட்கார வைப்பது? - எந்த முறையில் அவர்களை உபசரிப்பது? - பெரிய பிரச்சனையாகவல்லவா போய்விட்டது? இத்தனைக்கும் பொழுதுகூட இன்னும் சரியாக விடியவில்லையே! இந்தக் கவலையில் அவள் மூழ்கியிருந்தபோது, 'குட் மார்னிங்!” என்ற குரல் கேட்டுத் திரும்பினாள்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/107
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை