பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 'ஒன்றுமில்லாமலா தெரு பூராவும் அமர்க்களப்படுகிறது?’’ 'என்ன அமர்க்களம்?' 'வேறென்ன வேண்டும்? - காரோடு கட்டை வண்டி மோதுகிறது; ரிக்ஷாவோடு லைக்கிள் மோதுகிறது; ஜட்கா வண்டியோடு மாட்டு வண்டி மோதுகிறது...' "மோதட்டுமே, நமக்கென்ன?” 'எல்லாம் உனக்காகத்தாண்டி! - இல்லையென்றால் ஜாலிவுட் ப்ரொட்யூலர்கள் அத்தனை பேரும் இங்கே வந்து ஏன் தவங்கிடக்கப் போகிறார்கள்?' 'அப்படியானால் 'என்ன விசேஷம்?' என்று அவர்களைத் தான் கேட்கவேண்டும்!” 'போடி திருடி! - இன்ஸ்பெக்டர் ஸார் என்னைக் கேட்டார்; நான் உன்னைக் கேட்கலாமென்று வந்தால்..?” 'அவர் இங்கே வருவானேன்?” 4. 'எல்லாம் காரியமாகத்தான் வந்திருக்கிறார்! - ஒரு காரா, இரண்டு காரா? - ஓராயிரம் கார் வந்து வாசலில் நிற்கிறது - போக்கு வரத்துக்கு இடைஞ்சலில்லாமல் அவர் பார்த்துக்கொள்ள வேண்டாமா?’’ அட பாவமே, நேற்று நான் ஒரு 'ஸ்பான்ஜ் வாங்க வேண்டுமென்று சொன்னேன்; ஒருவேளை...' 'சரிதான், அதைத்தான் அத்தனை பேரும் வாங்கிக்கொண்டு வந்து நிற்கிறார்கள் போலிருக்கிறது!’ என்று சிரித்தாள் குஞ்சம்மாள். லீலா கால்களை மாறி மாறி உதறிக் கொண்டு, 'ஐயோ, இப்பொழுது நான் என்ன செய்வேன்? எப்படி எனக்காக அவர்கள் போடும் போட்டியைத் தீர்த்து வைப்பேன்?' என்று கலங்கினாள். 'அடி அசடே, அதைப்பற்றி நீ ஏன் கவலைப்பட வேண்டும்? - வருவதை வாங்கிப் போட்டு வைத்தால் போச்சு!' "என்னமோ போம்மா, எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை!' 'அது சரி, 'எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை என்று என்னிடம் மட்டும் எத்தனை தடவை வேண்டுமானா