109 நான் அதைச் சொல்லவில்லை ஐயா, நேற்றுக் கோலாகலா ஸ்டுடியோவில் நம் லீலாவின் ஜாக்கெட்டை அவர்தான் கழற்றினாராம்!” ""στςιμή ? "மிஸ்டர் பத்மனாபன்தான்!” 'இருக்காது; ஒரு நாளும் இருக்காது!' என்று அடித்துச் சொன்னார் அவர். 'இருந்தால்?' என்று விறைப்புடன் நிமர்ந்து நின்றார் இவர். !' என்று அவர் சூள்
'என் காதை அறுத்துக்கொள்கிறேன் கொட்டினார். ‘'வேண்டாம்; ஏற்கெனவே உமக்கு ஒரு காது செவிடு!' என்று இவர் எச்சரித்தார். 'அதனாலென்ன, என் லீலாவைப் பற்றி யார் என்ன சொன்னாலும் என் காதில் விழாமலிருப்பது நல்லதுதானே?” என்றார் அவர் ஆனந்த பரவசத்தோடு. அதற்குள் மற்றொருவர் ஓடி வந்து, 'என்ன விஷயம், ஏன் இந்த ரகளை?’ என்று அவர்களைக் கவலையுடன் விசாரித்தார். ‘'நீரே சொல்லும் - நேற்று நம் லீலாவின் ஜாக்கெட்டைப் பத்மனாபன் கழற்றினாரா, இல்லையா?' என்றார் அவர்களில் ஒருவர். அவ்வளவுதான்; 'ஈஸ் இட்?' என்று வந்தவர் வாயெல்லாம் பல்லாகக் கேட்டார். 'சரியாப் போச்சு, போங்கள்! - அந்த விஷயம் உங்களுக்குக் கூடத் தெரியாதா?” 'தெரியாதே ஸார், தெரிந்தால் அந்த ஜாக்கெட்டைக் கழற்றிய கைகளையாவது தொட்டு நான் மார்பில் ஒற்றிக்கொண் டிருப்பேனே!' என்று ஏங்கினார் இன்னொருவர். 'இப்பொழுதும் ஒன்றும் குடி முழுகிப் போய் விடவில்லை; அன்றிலிருந்து இன்றுவரை அந்தக் கையை அவர் சாப்பிடும் போது கூட அலம்புவதில்லையாம்!'