110 'அவ்வளவு சீக்கிரம் அலம்ப எப்படி ஸ்ார், மனம் வரும்? - சாதாரணமாகக் கிடைக்கக் கூடிய பாக்கியமா, அது?’’ அந்தச் சமயத்தில் 'என்ன பாக்கியம்?' என்று குறுக்கிட்டார் கனவான். 'அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்? - பயல் நம்மை முந்திக்கொண்டு விட்டான், ஸார்!' என்றார் இன்னொரு கனவான். 'அதற்குள் 'ஸ்பான்'ஜைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டானா, என்ன?' 'இல்லை; நேற்று அந்தப் பயல்தான் லீலாவின் ஜாக்கெட் டைக் கழற்றினானாம்!” "நிஜமாகவா சொல்கிறீர்கள்?” "ஆமாம் ஐயா, ஆமாம்!” 'அவன் கையை வெட்ட வேண்டும், ஸார்!’ 4 'அவளே வெட்டாதபோது நீர் எதற்கு வெட்ட வேண்டும்?' 'இல்லையென்றால் அவளுக்காக நாம் காத்திருப்பதுதான் மிச்சமாயிருக்கும்!' 'நேற்றுத்தான் போனாற் போகிறதென்று விட்டேன் - இன்று விடுவேனா?' 'எதை விட மாட்டேன் என்கிறீர்?' அவ்வளவுதான்; வந்ததுமோசம்! - அவர் தன் தவறை உணர்ந்தார் - என்ன தவறு என்கிறீர்களா? - தான் மட்டுந்தான் நிசி லீலாவுக்கு 'ஸ்பான்ஜ் வாங்கிக்கொண்டு வந்திருப்பதாக அவர் நினைத்துக் கொண்டிருந்த தவறுதான்! - பாவம், அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள் என்பது அவருக்குத் தெரியாது - என்ன செய்வார்? எதை விடமாட்டேன் என்கிறீர்?' என்று அவர் திடீரென்று கேட்டதும் இவர் திடுக்கிட்டு, 'ஒன்று மில்லை, ஒன்றுமில்லை....' என்று பின்வாங்கினார்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/112
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை