112 'மறந்து விட்டீர்களே!' என்றான் ஓ.கே. 'எதை?' என்று ‘வள்’ ளென விழுந்தார் பத்மனாபன். ‘'எது முக்கியமோ அதை எடுத்துக் கொண்டு போக மறந்துவிட்டீர்களே, ஸார்! - இதோ பாருங்கள், 'ஸ்பான்ஜ் - இங்கேயே இருக்கிறது!’ என்று காருக்குள்ளிருந்த அதை எடுத்துக் காட்டினான் அவன். 'கொண்டாடா, முட்டாள்!' என்று கையை நீட்டினார் அவர். 'சரிதான், நீங்களும் அப்படித்தானா?' என்றான் அவன். "எப்படி?” 'தாங்கள் செய்யும் தவறை மறைப்பதற்காக முதலாளிகளெல் லாம் வேலைக்காரர்களைத் திட்டுவது வழக்கம். அதற்கு....' அவன் முடிக்கவில்லை; அதற்குள் பத்மனாபன் விரைந்து வந்து அவன் கையிலிருந்த ஸ்பான்'ஜை 'வெடுக் கென்று பிடுங்கிக் கொண்டு, "மூடு வாயை!' என்று அதட்டினார். 'வாயை மூடியிருந்தால் வாரத்துக்கு ஒர் இடம் நான் ஏன் வேலைக்கு வந்திருக்கப் போகிறேன்?' என்று முணுமுணுத்தான் ஓ.கே. 'என்ன, உளறுகிறாய்?' என்று பத்மனாபன் உறுமினார். 'ஒன்றுமில்லை!' என்று ஓ.கே. பல்லை இளித்தான். இந்தச் சமயத்தில், "இதோ வந்துவிட்டேன், இதோ வந்து விட்டேன்!' என்று மறுபடியும் ஊளையிட்டுக் கொண்டே ஓடி வந்தாள் குஞ்சம்மாள். 'நிஜமாகவே வந்து விட்டாயா?” என்று வயிற்றெரிச்சலுடன் கேட்டார் பத்மனாபன். 'ஆமாம், ஆமாம் - வாருங்கள், எல்லோரும் வாருங் கள்! - உட்காருங்கள், எல்லோரும் உட்காருங்கள்!' என்று ஹாலில் போடப்பட்டிருந்த லோபாக்களைக் காட்டினாள் அவள். இந்த வரவேற்பு’ பத்மனாபனுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், மற்றவர்களைப் போல அவர் நிசிலிலாவுக்கு எப்போதாவது, ஏதாவது கொண்டுவந்து கொடுப்பவர் அல்ல; அந்த வீட்டின் தினசரித் தேவைகள் அத்தனையையும் பூர்த்தி செய்து கொண்டிருப்பவர் - அதற்காகவே தாம் ஜன்மம்
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/114
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை