பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 எடுத்திருப்பதாக நாளது வரை எண்ணிக் கொண்டிருப்பவர்! - அப்படிப்பட்டவருக்கு அந்த வீட்டில் தனியிடம் கிடைக்க வில்லை யென்றால் ஆத்திரமாயிராதா? - அதிலும், நட்சத்திரத் துக்கு முதன்முதலாக 'ஸ்பான்ஜ் வாங்கிக்கொடுக்கும் பாக்கியம் தனக்குத்தான் கிடைக்க வேண்டுமென்று அவர் விடிந்ததும் விடியாததுமா யிருக்கும்போதே விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்திருக்கும்போது! அவருடைய ஆத்திரத்தை அறியாத குஞ்சம்மாள் சந்தர்ப்பத் தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணித் தன் மேலாக்கைச் சற்றே நெகிழ விட்டுவிட்டுப் புன்னகை புரிந்தாள். பத்மனாபனோ அதைப் பொருட் படுத்தாமல் மேலே செல்லத் திரும்பி, இரண்டடிகள் எடுத்து வைத்தார். இந்தத் தோல்வி'யைக் கண்டு அவள் இடிந்து விடவில்லை; 'நில்லுங்கள் - அவள் அங்கே குளித்துக்கொண்டிருக்கிறாள் - நில்லுங்கள்!' என்று பரபரப்புடன் கத்தி, அவரைத் தன் பக்கமாக இழுக்கப் பார்த்தாள். பாழும் ஓ.கே. சும்மா இருந்திருக்கக் கூடாதா? - 'ஆஹா! நல்ல சமயம், ரொம்ப நல்ல சமயம்!' என்று அவன் அவரை உற்சாகப்படுத்த ஆரம்பித்து விட்டான். பத்மனாபன் திரும்பினார். 'ஒடுங்கள்! - சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள் - ஒடுங்கள்!' என்று ஓ.கே. மேலும் மேலும் கூச்சலிட்டான். அவ்வளவுதான் - ஒட முயன்ற தன்னைக் கை பற்றி இழுக்க வந்த குஞ்சம்மாளை அவர் ஒரு தள்ளுத் தள்ளிவிட்டு, நாலே எட்டில் மாடியை அடைந்துவிட்டார்! அங்கே, குளித்து முடிந்து அப்பொழுது தான் உடம்பைத் துடைத்துக் கொண்டிருந்த லீலாவைக் கண்டதும் பத்மனாபனுக்கு ஒரே ஏமாற்றமாயிருந்தது. 'எல்லாம் அந்தக் குஞ்சம்மாளால் வந்த வினை!' என்று கையிலிருந்த ஸ்பான்'ஜைக் கீழே விட்டெறிந்தார். விஷயத்தைப் புரிந்துகொண்ட நட்சத்திரம் 'விலையுயர்ந்த சிரிப்பு'டன் அதை எடுத்து "டீபா'யின்மேல் வைத்துவிட்டுத் தன் ம-இ-8