115 முன்னால் அவன் இப்படி நடந்து கொள்வதென்றால்? - வைத்துவிட்டுப் போடா, நாயே!” என்று அதட்டினார். 'அந்த மட்டும் எனக்கு நன்றி விசுவாசம் இருக்கிறது என்றாவது ஒப்புக் கொண்டீர்களே, ரொம்ப சந்தோஷம்!” என்று சிரித்துக்கொண்டே அவன் பாதரட்சைகளை அவருக்கருகே வைத்துவிட்டு நகர்ந்தான். பத்மனாபன் உடனே எழுந்து கதவைச் சாத்தித் தாளிட்டுவிட்டு. 'உனக்காகத்தான் இதைப் பர்மாவிலிருந்து தருவித்தேன்!' என்றபடி, கால்களில் ஒன்றைத் தானே மெல்லத் தூக்கி 'டிபா’யின்மேல் வைத்துச் செருப்பைத் துடைத்து மாட்டி விட்டு, இப்படியும் அப்படியுமாகச் சாய்ந்து சாய்ந்து பார்த்தார். 'எதைத்தான் நீங்கள் எனக்காக வாங்கவில்லை?' என்று அவருடைய சிண்டைத் தட்டி - இல்லையில்லை, அவருக்கேது சிண்டு? - வழுக்கைத் தலையைத் தட்டி விட்டாள் அவள்! பத்மனாபன் உள்ளங் குளிர்ந்து, உச்சி குளிர்ந்து, 'ஆஹா, வாரிக்கொண்டு போகிறது!' என்றார். 'யாரை?’ என்ற ஒன்றும் புரியாமல் கேட்டாள் அவள். 'உன்னைத்தான்..!' 'என்னையா?” "ஆமாம், உன் தங்க நிறக் காலுக்கு இந்த நீலநிறப் பட்டை ரொம்ப ரொம்ப ஜோரா யிருக்கிறது. "எங்கே, காட்டுங்கள்!' என்று அவள் எழுந்தாள். ‘'வேண்டாம், வேண்டாம் - நானே காட்டுகிறேன்!” என்று காலை அவள் முகத்துக்கு நேராகத் தூக்கிக் காட்டினார் பத்மனாபன். 'ஐய, போங்கன்னா!' என்று அவள் விலகிய துண்டை இழுத்து மூடிக்கொண்டு, 'ஆமாம், இன்னொரு காலுக்குப் போடவில்லையே?' என்றாள். 'இதோ, காத்திருக்கிறேன்!” என்று அந்தக் காலையும் தூக்கித் தன் தொடையின் மேல் வைத்துக்கொண்டு, மற்றொரு செருப்பை எடுத்து மாட்டினார் பத்மனாபன். அவள் சற்றே எழுந்து இரண்டு கால்களையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, 'பரவாயில்லை - எங்கே, அந்தச் சிவப்பு நிறப்
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/117
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை