பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பட்டை போட்ட செருப்பை எடுத்து மாட்டுங்கள், பார்க்கலாம்?' என்றாள். நான் ஒரு பாவி லீலா, நீ சொல்லும் வரை சும்மா இருந்துவிட்டேனே!' என்று தன்னைத் தானே நொந்துகொண்ட வண்ணம் அவசரம் அவசரமாக அவற்றைக் கழற்றிக் கீழே எறிந்து விட்டுச் சிவப்பு நிறச் செருப்பை எடுத்து மாட்டினார் பத்மனாபன். அதன் அழகைப் பத்மனாபனோடு தானும் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக லீலா எழுந்தாள். அதற்குள் இன்னொரு காலையும் தூக்கிச் செருப்பை மாட்டிவிட்டு, இரண்டு கால்களையும் இரு கைகளால் அள்ளிக் கன்னத்தில் ஒத்தி ஒத்தி எடுத்த வண்ணம், 'ஆஹா, வாரிக் கொண்டு போகிறது! அப்படியே வாரிக் கொண்டு போகிறது!’ என்று உட்கார்ந்தது உட்கார்ந்தபடி எழும்பி எழும்பிக் குதித்தார் படாதிபதி. இந்தச் சமயத்தில், 'அடி ஆத்தா! அங்கே 'பிறந்த நாள்' என்று எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் - இங்கே பாத பூஜை' நடந்து கொண்டிருக்கிறதே?' என்ற குஞ்சம் மாளின் குரல் கேட்டது. இருவரும் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்தார்கள். அறையின் இன்னொரு கதவைத் திறந்து கொண்டு, அவள் வியப்பே வடிவாய் எதிரே நின்றுகொண்டிருந்தாள்! 'இங்கேயும் வந்து விட்டாயா, துணைக்கு?’ என்றார் படாதிபதி வெறுப்புடன். 'எனக்கேன் துணை? - நீ போம்மா, இவரை நான் பார்த்துக் கொள்கிறேன்!” என்றாள் நட்சத்திரம். குஞ்சம்மாள் 'சட்'டென்று முந்தானையை எடுத்துக் கண்களைத் துடைத்தபடி, "என்னைப் பார்த்தால் உங்களுக்கு ஏண்டியம்மா இப்படி எட்டிக் காயாக் கசக்கிறது!' என்று கலங்கிக்கொண்டே போய்விட்டாள். அவள் சென்றதும், முதல் கதவை மட்டும் அல்ல; இரண்டாவது கதவையும் மறந்து விட்டீர்கள்!' என்றாள் லீலா சிரித்துக்கொண்டே.