118 'கேளு ராஜா, கேளு!’ என்று கொஞ்சினாள் அவள். 'சரி, சொல்லு!” "நிஜமாகவே உங்களுக்கு ஞாபகமில்லையா, ட்ரீம்லேண்ட் ப்ரோக்ராம்?" 'எப்படியிருக்கும், லீலா? உன்னைப் பார்த்தால்தான் 1 * * எனக்கு எல்லாமே மறந்து போய் விடுகிறதே! 'ஒஹோ, பார்த்தால்தான் மறந்து போகிறதா?” 'இல்லை. இல்லை - நினைத்தாலே மறந்து போய்விடுகிறது!” 'அப்படிச் சொல்லுங்கள்! - நேற்றிரவு நீங்கள் சொன்னபடி அந்த 'அரோகரா பாங்க் அனந்தசயனம் ட்ரீம்லேண்டுக்கு வந்தான். நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்...' 'எட்டித்தானே நின்றான்?' 'இல்லை, மெல்ல அவன் எனக்குப் பின்னாலே வந்து, 'லீலா, லீலா என்றான்; நான் பேசாமல் இருந்தேன். 'ஏன் லீலா, பேசமாட்டேன் என்கிறாய்?’ என்றான்; அதற்கும் பேசாமல் இருந்தேன். 'நேரங் கழித்து வந்ததற்காக ஒருவேளை கோபித்துக் கொண்டாயோ?” என்றான்; எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன். 'டாக்டர் வீட்டில் நேரமாகிவிட்டது, லீலா!' என்றான்; ‘ச்சுக்கு' என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். தலையிலிருந்த பூக்களில் ஒன்றை எடுத்தான்; தடுக்கவில்லை. பின்னலைத் தொட்டான்; பிடுங்கிக் கொள்ள வில்லை. கதவைத் தாளிட்டான்; திறக்கவில்லை. விளக்கை அனைத்தான்; ஏற்றவில்லை...' 'அட பாவி, அப்புறம்?” ‘'தேவலையே, 'மங்க்கி கிலாண்ட் இன்ஜக்ஷன்' என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்...' 'ம்... அப்புறம் என்ன நடந்தது, லீலா?... சீக்கிரம் சொல்லு!” 'அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டுமாம்?” 'சொல்லு, லீலான்னா...!' 'போங்க ஸ்ார்ன்னா...!' 'சொல்லப் போகிறாயா, இல்லையா?” 'சொல்லாவிட்டால்...?’’
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/120
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை