பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் அத்தியாயம் “சீ. இதுவும் ஒரு வாழ்க்கையா!' 'டேய், முதலாளி வந்ததும் என்னை எழுப்புடா!' என்று ஏவலாளனுக்கு உத்தரவிட்டுவிட்டு, நாற்காலியில் சாய்ந்தபடி மேஜையின்மேல் காலை நீட்டிப் படுத்துக் கொண்டிருந்தான் பீதாம்பரம். 'டிரிங்கிரிங், டிரிங்கிரிங் என்று டெலிபோன் மணி அடித்தது. 'இது ஒரு சனியன், தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு!’ என்று கோபத்துடன் 'ரிஸில:'ரை எடுத்துக் கீழே வைத்துவிட்டு மறுபடியும் கண்ணை மூடினான். அதற்குள், அடேடே, இன்னிக்கு 'நைட்' எங்கே "ப்ரோக்ராம்’னு மாலா மத்தியானம் போன் 'லே சொல்றேன்னு சொன்னாளே! ஒரு வேளை அவளாயிருக்குமோ?' என்று கீழே வைத்த ரிஸிவே'ரைப் பரபரப்புடன் கையில் எடுத்து, 'ஹெல்லோ! பீதாம்பரம் ஸ்பீக்கிங், நீங்க யாரு?" என்று குழைந்தான். அடுத்த நிமிஷம் அவன் முகம் கறுத்தது. 'காரா? வரட்டும், அனுப்புகிறேன்!” என்று ரிஸிவரை டக்கென்று 'ரெஸ்'டின் மேல் வைத்துவிட்டு, 'ஆமாம், இவர் வந்து எழுதிக் கிழித்துத்தான் இங்கே படம் எடுக்கப் போகிறார்களாக்கும்? கந்த வீலா கிருஷ்ண லீலாவா மாறிவிட்ட விஷயம் பயலுக்குத் தெரியாதுபோல இருக்கு; கார் வேண்டுமாம், காரு' என்று முணுமுணுத்துக்கொண்டே உட்கார்ந்தான். அப்போது 'டக், டக்கென்ற 'பூட்ஸ் சத்தம் அவன் காதில் விழுந்தது. 'வருபவன் யாராயிருக்கும்?' என்று அவன் யோசிக்க ஆரம்பித்ததும் ஏவலாளன் ஓடோடியும் வந்து, 'ஸார்: டைரக்டர் வருகிறார், லார்!’ என்றான் பரபரப்புடன். 'வந்தால் என்னடா? அவனைக் கண்டதும் உன்னை யார் எழுந்திருக்கச் சொன்னது? இனிமேல் என்னைக் கண்டால்தான் நீ எழுந்திருக்க வேண்டும்: வேறு யாரைக் கண்டாலும் எழுந்திருக்கக் கூடாது - போ, போய் உட்கார்!’ என்று பீதாம்பரம் இதைந்தான். இந்தச் சமயத்தில், 'என்ன கோபம், இன்று பீதாம்பரத் துக்கு?' என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் டைரக்டர் சோமு.