121 அதிருக்கட்டும், இன்று 'பிரியாணிப் போட்டி'யில் யாருக்கு வெற்றி?' என்று பீதாம்பரம் கேட்டான். 'கேட்க வேண்டுமா, எனக்குத்தான்! ரெண்டு பிளேட் மட்டன், ரெண்டு பிளேட் சிக்கன், ரெண்டே ஸ்ெகண்ட்லே அவுட்!” என்று உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டே அவனுக்கு எதிரே உட்கார்ந்தார் டைரக்டர். 'அடி சக்கை! மற்றப் பயல்களெல்லாம்...?” 'ரெண்டாவது பிளேட்டிலேயே திக்கு முக்காடிப் போய் விட்டார்கள்!' 'ஆமாம், இதிலே இருக்கிற 'ஸ்க்ஸெஸ்' உங்களுக்குப் படத்திலே இல்லையே!' 'அதற்கு நான் என்ன செய்யட்டும்? கந்தசாமியல்லவா கதை எழுதுகிறான்?’’ 'அவனைக் கேட்டால் 'நான் என்னமோ சரியாத்தான் எழுது கிறேன்; டைரக்டர் தான் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறார்’ என்கிறானே?" £ 4 சரிதான், அதைக்கூட நான் செய்யவில்லையென்றால் முதலாளி என்னைப் பற்றி என்ன நினைப்பார்?' 'அதற்காக உங்களுடைய 'புத்திசாலித்தனத்தைக் கதையில் தானா காட்ட வேண்டும்? 'டைரக்ஷ'னில் காட்டலாமே!” நல்ல ஆளய்யா, நீர்! நம்முடைய அதிகாரமெல்லாம் கதாசிரியர் கந்தசாமியிடம் தான் செல்லும்; நட்சத்திரங்களிடம் செல்லுமா? அவர்களிடம்தான் ஆனானப்பட்ட முதலாளியே தோப்புக்கரணம் போட வேண்டியிருக்கிறதே, நான் என்ன செய்ய?’’ 'அதுவும் உண்மைதான்; அடுத்தாற் போல் வேறு எங்கே யாவது 'சான்ஸ் கிடைக்க வேண்டுமென்றாலும் அவர்களுடைய தயவுதானே நமக்கு முதலில் வேண்டியிருக்கிறது?’’ 'நமக்கு மட்டுமென்ன? முதலாளிக்குக் கூடத்தான்! அவர்கள் இல்லையென்றால் அவருக்கு யார் காலனா கொடுப்பார்கள்?" 'அதற்காக நீங்கள் 'வெறும் பிரியாணி வீரனாகவே இருப்பதா?”
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/123
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை