பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 'ஏன், என்ன காரணம்?' காலத்தால் அவள் அழகு தேய்ந்துகொண்டிருக்கு ஸார், தேய்ந்து கொண்டிருக்கு!” 'இவ்வளவுதானே? மொச்சை மாவைப் போட்டுத் தினந்தோறும் முகத்தை அலம்பச் சொல்லுங்கள்; சரியாய்ப் போய்விடும்!' 'பாலா அப்படித்தான் செய்கிறாளா, என்ன?’ என்று பீதாம்பரம் ஆவலுடன் கேட்டான். 'செய்யாவிட்டால் வேலையில்லாத் திண்டாட்டம் மலிந் திருக்கும் இந்தக் காலத்தில் என் கால்களுக்குப் பூட்ஸ் கூடக் கிடைக்காதே, சுவாமி!” 'அதற்காகச் சில பைத்தியக்காரர்களைப்போல வேலையில் லாத் திண்டாட்டம் ஒழிய வேண்டுமென்று நீங்களும் கூச்சல் போட ஆரம்பித்து விடாதீர்கள்; அது ஒழிந்தால் பணக்காரர்கள் ஒழிந்து விடுவார்கள். அப்புறம் நீங்களும் நானும் பெண்ணைப் பொதுவுடைமை யாக்க முடியாது; அப்படி ஆக்கினாலும் அவளைச் சுவைத்துத் துப்பப் பெரிய மனிதர்'களும் இருக்க மாட்டார்கள்!' "ஆமாம் ஆமாம், திடீரென்று மூளைக்கோ உடலுக்கோ வேலை கொடுக்க நம்மால் முடியுமா? அப்படியே கொடுத் தாலும் 'பாண்டியாக் சவாரியும் பங்களாவாசமுந்தான் கிடைக்குமா?” "அப்படிச் சொல்லுங்கள்; வாழ்க்கை வாழ்வதற்கே!' என்று அவருடைய கையைப் பிடித்துக் குலுக்கியபடிக் கத்தினான் பீதாம்பரம். 'ஒரு சிறு திருத்தம்; "வாழ்க்கை எது வேண்டுமானாலும் செய்து வாழ்வதற்கே!' என்று மாற்றிச் சொல்லுங்கள்!' என்று 'பிரியானி நிறைந்த தம் தொந்தி'யை ஆறுதலுடன் தடவி விட்டுக்கொண்டே எழுந்தார் டைரக்டர் சோமு. 'இன்றிரவு 'கால்-வrட்’ போட்டிருக்கே, ஷூட்டிங்'குக்காக 'ரிஹர்ஸல் எதுவும்...' "எல்லாம் 'லெட்'டிலே பார்த்துக் கொள்ளலாம்; நீர் சீட்டாட வருகிறீரா?'