124 'அதற்குத்தான் ஒன்றுக்கு மூன்று உதவி டைரக்டர்கள் இருக்கிறார்களே! உங்களையும் சேர்த்தால் நாலு; போதாதா சீட்டாட்டத்துக்கு?' 'சரி, நீர் தூக்கம் போடப் போகிறீராக்கும்?' 'போடாவிட்டால் இரவு பூராவும் முதலாளியை வளைய வளைய வந்து எப்படி ஸார், 'காக்கா’ பிடிக்க முடியும்?' 'அப்படியே செய்யுங்கள்; ஆனால் ஒன்று...' 'என்ன அது?” 'அடுத்த மாதம் எடுக்கப்போகும் 'க்ரூப் டான் ஸலக்கு மட்டும் நீர் இப்பொழுதே ஏற்பாடு செய்துவிட வேண்டும்.' 'அதெல்லாம் எதற்கு, ஸார்? கோஷ்டி நடனங்களைப் பார்த்துப் பார்த்துத்தான் ஜனங்களுக்கு அலுத்துப் போய் விட்டதே?' 'அவர்கள் கிடக்கிறார்கள்; "க்ரூப் டான்ஸ்'இல்லையென்றால் முதலாளியின் உபயோகத்துக்குப் புதுப்புது முகங்கள் எப்படிக் கிடைக்குமாம்? - நீர் இன்றே நூறு குட்டிகளுக்குச் சொல்லி அனுப்பும்!” 'நூறு ஏன், ஸார்? தொண்ணுற்றெட்டு போதாதா?” 'இன்னும் ரெண்டு?” 'மாலாவும் பாலாவும்!' நல்ல யோசனைதான், இன்றே ஆள் அனுப்பி விடுகிறீரா?” 'அடுத்த வாரம் அனுப்புகிறேனே!' 'ஊஹாலம்; ஒரு மாத காலமாவது ரிஹர்ஸல் வைக்க வேண்டும்...' 'இப்பொழுதுதானே சொன்னிர்கள், ரிஹர்ஸ்'லெல்லாம் 'லெட்'டிலே பார்த்துக் கொள்ளலாம் என்று?’’ 'அது வேறே விஷயம்; இது வேறே விஷயம்!' 'எல்லாம் ஒன்றுதான், ஸார்! அது 'டைலாக்"கை ஒப்பிப்பது: இது கையையும் காலையும் ஆட்டுவது - அவ்வளவுதானே?”
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/126
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை