125 'இருந்தாலும் நூறு பெண்கள் நம்மைச் சுற்றித் தொம், தொம்’ என்று குதிப்பது சாதாரணமாகக் காணக்கூடிய காட்சியா? அபூர்வமான காட்சியாச்சே, ஐயா! அதை ஒரே நாளில் இழந்துவிட உமக்கு எப்படித்தான் மனம் வருகிறதோ?”
'பாவம் முதலாளி! - உங்களுடைய "எண்டர்டெய்ன் மெண்ட்'டுக்காக அவர் அல்லவா செலவழிக்க வேண்டியிருக் கிறது!' 'இல்லை; பூரீமான் பொதுஜனம் செலவழிக்கிறார்!’ 'அந்த அப்பாவியை ஏன் ஸார், அடிக்கடி வம்புக்கு இழுக்கிறீர்கள்! அவருக்கு என்ன தெரியும்?” ‘'எது தெரியாது? எல்லாம் தெரியும். ஆனால் 'கலை’ என்ற ஒரு வார்த்தை இருக்கிறதே, அதுதான் அன்றிருந்து இன்றுவரை அவரிடமிருந்து நம்மைக் காப்பாற்றி வருகிறதாக்கும்!'. 'அப்படியானால் அந்த ஒரு வார்த்தை வாழவில்லை யென்றால் நாமெல்லாம் விழ வேண்டியதுதான் என்று சொல் லுங்கள்!' என்றான் பீதாம்பரம். இந்தச் சமயத்தில், 'கலை உங்களுக்காக வாழ்வதை விடத் தற்கொலை செய்துகொள்வது எவ்வளவோ மேல்!” என்ற ஒரு குரல் கேட்டது. இருவரும் ஏககாலத்தில் திரும்பிப் பார்த்தனர். 'ஒ, கதாசிரியர் கந்தசாமியா!' என்றான் பீதாம்பரம் எகத்தாளமாக. "ஆமாம், பயங்கர மிருகங்கள் பல வாழும் பணக் காட்டில் பசிக்காக ஒரு பிடி உணவு தேடிப் பிரயாணம் செய்யும் ஒரே பாதசாரி நான்; ஒரே மனிதன் நான்!” என்று அவன் சொன்னதற்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தான், வயிற்றில் ஈரம் இல்லாவிட்டாலும் நெஞ்சில் ஈரம் இருந்த அந்த எழுத்தாளன்! வழக்கம்போல் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், 'கார் அனுப்புவதற்குள் வந்து விட்டீர்களே?' என்றான் வஞ்சக நெஞ்சினனான பீதாம்பரம்.