127 "பரலோக வாழ்க்கை'க்கு உதவி வந்தாள்; ரத்தினம் கப்பல் கூலியாயிருந்து அவர்களுடைய இகலோக வாழ்க்கைக்கு உதவி வந்தான். இவர்களுக்கு 'அடுத்த வீட்டுக்காரர்'களாயிருந்தவர்கள் அந்தோணியும் ஆரோக்கியசாமியும் - அந்தோணி ரத்தினத்தின் நண்பன்; ஆரோக்கியசாமி இவர்கள் அனைவருக்கும் ஞான போதகன்.' ஒரு நாள் வேலையில்லாப் பட்டதாரி ஒருவன் - அவன் பெயர் ஒ.கே - தினசரிப் பத்திரிகையொன்றைப் பிரித்து, அதி லுள்ள 'வாண்டெட் காலத்தைப்'பார்த்துக்கொண்டே வருகிறான். கண்ணிழந்த முத்தாயி அவனைக் கவனிக்கவில்லை; கண்ணிருந்த அவனும் அவளைக் கவனிக்கவில்லை - இருவரும் மோதிக் கொள்கின்றனர். இதனால் ஏற்பட்ட தகராறில் ரத்தினம் ஓ.கே.யை அறைகிறான். அதைப் பொருட்படுத்தாமல் ஓ.கே. அவன் முதுகில் தட்டிக் கொடுத்து, "'இதோ பார், பிரேமலிலா பிக்சர் ஸாருக்கு டிரைவர் தேவையாம் - இன்றே நான் அவர்களுடைய டிரைவராவேன்; அப்புறம் நடிகனாவேன்; அதற்குப் பின் படாதிபதியாவேன்!' என்று உற்சாகத்துடன் கத்திக்கொண்டே ஒடுகிறான் - ரத்தினத்துக்கு அவன் 'குணாதிசயம் விளங்காத புதிராயிருக்கிறது. பிரேமலிலா பிக்சர்ஸ்ாரின் ப்ரொடக்ஷன் மானேஜ'ரான பீதாம்பரத்தைச் சந்திக்கிறான் ஓ.கே. படாதிபதி பத்மனாபன் படுக்கையறையை விட்டு இன்னும் வெளியே வரவில்லை யென்றும், அவர் வரும் வரை 'விஸிட்டர் ஹா'லில் போடப்பட்டிருக்கும் 'பெஞ்ச்"சின் மேல் மற்றவர்களுடன் சேர்ந்து உட்காரும்படியும் ஓ.கே. யிடம் சொல்கிறான் பீதாம்பரம். 'அதனாலென்ன, நான் வேண்டுமானால் பூபாளம் பாடி அவரை எழுப்புகிறேன்!' என்று ஓ.கே. அவனைப் பிடித்து அப்பால் தள்ளி விட்டுப் படாதிபதியின் அறைக்குள் நுழைய முயல்கிறான். அவனை முந்திக்கொண்டு உள்ளே நுழைந்த பீதாம்பரம் திடுக்கிட்டு நிற்கிறான் - காரணம், அங்கே பல பெண்கள் 'கோபியர் வேஷத்தில் இருக்க, படாதிபதி பத்மனாபன் கையில் 'அண்டர் கிரவுண்ட் பிராந்தி'யுடன் கண்ணன் வேஷத்தில் இருந்ததுதான்! - இதைத் தவறாகப் புரிந்துகொண்ட அசட்டுப்
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/129
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை