பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பீதாம்பரம், 'கந்த லீலாதானே எடுக்கப் போவதாகச் சொன்னார்? இப்போது நடக்கும் ஒத்திகையைப் பார்த்தால் கிருஷ்ணலீலாவா யிருக்கும் போலிருக்கிறதே!' என்று முணுமுணுக்கிறான். ஓ.கே. குறுக்கிட்டு, 'கந்த லீலாவில் இரண்டு ஹீரோயினுக்கு மேல் வேலையிருக்காதே! - போதுமா, முதலாளிக்கு?' என்று கண்ணடிக்கிறான். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. படாதிபதி பத்மனாபன் உள்ளே இருந்தபடி, 'அங்கே என்ன சத்தம்?' என்று அதட்டுகிறார். அது தான் சமயமென்று அவருடைய அறைக்குள் பாய்ந்து விடுகிறான் ஓ.கே. அவனைத் தடுத்து நிறுத்த முடியாத பீதாம்பரம், 'நம்பர் 93 போன் ப்ளிஸ்! நம்பர் 93 - டோன் ப்ளிஸ்!’ என்று கத்துகிறான். பத்மனாபன் அவனை அடக்கி விட்டு, 'யாரப்பா, நீ?' என்று ஓ.கே.யை விசாரிக்கிறார். '"நான் டிரைவர்; பத்திரிகையில் உங்கள் விளம்பரத்தைப் பார்த்தேன்...' என்று ஆரம்பிக்கும்போதே, அவனுடைய தோற்றத்தையும் துணிவையும் கவனித்த பத்மனாபன் அவனுக்கு உடனே வேலை கொடுத்து விடுகிறார்! அதிலிருந்து பத்மனாபனைக் 'காக்கா’ பிடிக்கும் விஷயத்தில் பீதாம்பரத்துக்கும் ஓ.கே.ய்க்கும் கடுமையான போட்டி இருந்து வருகிறது. எனினும் வெற்றி மட்டும் ஓ.கே.ய்க்கே கிடைத்து வருகிறது. இந்த நிலையில் பத்மனாபன் அன்புக்கு - இல்லை, தொழிலுக்குப் பாத்திரமான பிரபல நட்சத்திரம் ஒன்று - அதன் பெயர் நிசிலிலா - பேரபாயத்துக்குள்ளாகிறது - அதாவது, ஜாலிவுட்டைச் சேர்ந்த 'கோலாகலா ஸ்டுடியோ’வில் அந்த விபத்து நேருகிறது. படாதிபதியின் அத்தனை பேரையும் 'துண்டிற் புழு வாய்த் துடிக்கவைத்த அந்த விபத்து என்னவென்றால், ஒரு நாள் 'ஷல்ட்டிங்' முடிந்ததும், தான் அணிந்து கொண்டிருந்த ஜிகினா ஜாக்கெட்டை அவள் அவசர அவசரமாக சுழற்றுகிறாள். அப்போது அந்த நட்சத்திரத்தின் விரல்களில் ஒன்றில் ஜிகினா கீறிவிடுகிறது. அதிலிருந்து கசிந்த ரத்தத்தைக் கண்டதும் படாதிபதி பத்மனாபன் தமது கண்களில் ரத்தம் கசிய ஓடோடியும் வந்து, அந்த ஆக்ஸிடெண்'டுக்குக் காரணம் என்னவென்று கேட்கிறார்.