129 'ஸ்பென்ஸ்'ரை மூடுவதற்குள் ஒடிப்போய் ஸ்பான்ஜ்' வாங்கிவிட வேண்டுமென்று நினைத்ததாகவும், அதற்காக 'மேக்கப்'பைக் கலைத்த வேகத்தில் அந்த ஆக்ஸிடெண்ட்' நேர்ந்து விட்டதாகவும் திருவாய் மலர்ந்தருளுகிறது நட்சத்திரம் - 'ஆஹா! உனக்கா. ஸ்பான்ஜா? - அதை நீயா வாங்கப் போக வேண்டும்? - ஐயையோ இந்த அடிமைக்கு அந்த பாக்கியம் கிட்டக்கூடாதா? அதற்கு நான் கொடுத்து வைக்கக் கூடாதா?” என்று பத்மனாபன் பிரலாபிக்க, அதற்குள் மற்ற படாதிபதிகள் அவளுக்கு நேர்ந்த அபாயத்தைக் கேள்வியுற்று அங்கே விழுந்தடித்துக்கொண்டு ஓடி வர, விஷயம் அம்பலமாகி விடுகிறது - அதாவது, "நட்சத்திரம் நாளை குளிப்பதற்கு ஸ்பான்ஜ் வேண்டும்’ என்ற விஷயந்தான்! - கிடைத்தற்கரிய இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடுவார்களா, படாதிபதிகள்? மறு நாள் காலை ஏகப் போட்டி! - நட்சத்திரத்துக்கு ஸ்பான்ஜ் வாங்கிக் கொடுக்கும்: பாக்கியத்தை அடையத்தான்! - அதிலும், படாதிபதிகள் போட்டி என்றால் கேட்க வேண்டுமா? - நூற்றுக்கணக்கான கார்கள் அந்த நட்சத்திரத்தின் பங்களாவை நோக்கிப் பறக்கின்றன - போக்குவரத்தே ஸ்தம்பித்து விடு கிறது - லீலாவும் அவள் தாயார் குஞ்சம்மாளும் செய்வது இன்னதென்று அறியாது திகைக்கின்றனர். போலீஸ் வருகிறது; 'இன்று என்ன விசேஷம்?' என்று கேட்கிறது. 'ஸ்பான்ஜ் விஷய'த்தை வெளியே சொன்னால் சிரிப்பார்களே என்று 'குழந்தைக்குப் பிறந்த நாள்' என்ற சொல்லிச் சமாளிக்கிறாள் குஞ்சம்மாள். கடைசியாகப் பத்மனாபன் எல்லோரையும் முந்திக்கொண்டு மேலே செல்கிறார். பூர்வ ஜன்ம புண்ணியத்தால் 'ஸ்பான்ஜ்'ஜை முதன் முதலில் கொடுக்கும் பாக்கியத்தைப் பெறுவதுடன், கையோடு கொண்டுவந்திருந்த பர்மா பாதரகூைடிகளையும் வர்ண வாரியாகப் பிரித்து, தானே - தன் கையாலேயே - அந்த நட்சத்திரத்தின் கால்களுக்கு வலிக்காமல் மாட்டி, இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் திருப்பி அழகு பார்க்கிறார்; அவள் பாத கமலங்களை எடுத்துத் கன்னத்தில் ஒத்திக்கொண்டு 'ஜன்ம சாபல்ய’ மடைகிறார். இந்தச் சமயத்தில் அரோகரா பாங்க் அனந்த சயனம் அய்யங்காரைப் பற்றிய பேச்சு அவர்கள் இருவருக்குமிடையே 9-يو-ما
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/131
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை