130 அடிபடுகிறது. விஷயம் என்னவென்றால் அதற்கு முதல் நாள் இரவு 'ட்ரீம்லேண்ட் ஹோட்ட'லில் அய்யங்காரைச் சந்தித்து அளவளாவுமாறு நட்சத்திரத்தை வேண்டிக் கொண்டிருந்தார் பத்மனாபன் - எல்லாம் பணத்துக்காகத்தான்! - அறுபதாவது வயதைத் தாண்டி விட்டிருந்தாலும் அய்யங்கார்தான் அரோகரா பாங்கியின் ‘சர்வ வல்லமையுள்ள ஸெக்ரடரி. அதற்காக 'அண்டர் கிரவுண்ட் பிராந்தி'யால் அவர் 'தாகத்தையும், அழகை விலை கொடுத்து வாங்கும் நட்சத்திரங்களால் அவர் 'மோகத்தையும் தீர்ப்பது படாதிபதி பத்மனாபனின் தவிர்க்க முடியாத கடமையாய் இருந்து வந்தது. ஆயினும் லீலாவைப் பொறுத்தவரை 'தனக்குத் தெரிந்து அவள் வேறு யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்வதை அவர் விரும்பவில்லை - அய்யங்காரோ, 'இருக்கவே இருக்கிறது, மங்க்கி கிலாண்ட் இன்ஜக்ஷன்' என்ற நம்பிக்கையில் அவள் தான் வேண்டுமென்று கேட்டு விட்டார் - என்ன செய்வார் பத்மனாபன், பாவம்! - “சரி” என்று வேண்டா வெறுப்புடன் சொல்லிவிட்டார். இவர்கள் இருவரையும் திருப்தி செய்யும் நோக்கத்துடன் நட்சத்திரம் அன்றிரவு 'ட்ரீம் லேண்ட் ஹோட்டலுக்குச் சென்றாள். தன் சாகசத்தால் அய்யங்காரையே பின் வாங்கி ஓடும்படிச்செய்து விட்டு வந்தாள்!-பத்மனாபன் இதை அறிந்ததும் ஆனந்த பரவசத்துடன் அவளிடம் ரூபாய் ஐயாயிரத்துக்கு ஒரு 'செக்' எழுதிக் கொடுத்துவிட்டுக் கம்பெனிக்குத் திரும்புகிறார். அங்கே மானத்தைப் பெரிதாக மதிக்கும் கந்தசாமி என்னும் அப்பாவி எழுத்தாளன் ஒருவன், பணத்தைப் பெரிதாக மதிக்கும் டைரக்டர் சோமுவையும், ப்ரொடக்ஷன் மானேஜர் பீதாம்பரத்தையும் 'மனிதர்களாக்க முயன்றுகொண்டிருக்கிறான். (விந்தனின் திரை உலக அனுபவங்களை வெளிப்படுத்தும் இத்தொடர் நிறைவு பெறவில்லை.)
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/132
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை