பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஆகியவற்றையும் அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பான். சிங்கத்திற்கு உள்ளவை போன்ற உரமான பற்கள் இருந்தால், மனிதன் அந்த இரும்புக் கம்பிகளில் ஒன்றையோ, இரண்டையோ, விடாமல் கடித்துக் கடித்துத் தேயச் செய்திருப்பான். படிப்படியாகத் தேய்ந்த இரும்பு, தான் ஒடி வெளியேற வழியமைக்கும் என்பதை அவன் உணர்வான். ஆனால் ஆடு மாடு, முயல், மான் முதலியவற்றை விழுங்குவதற்கு மட்டுமே வாயையும் பல்லையும் பயன்படுத்தக் கற்றுக் கொண்ட சிங்கத்திற்குத் தன் விடுதலைக்கு அவற்றைப் பயன்படுத்தும் அறிவு இல்லை; ஆற்றலும் இல்லை! & © •్మ• 4్మ• சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதிகள் பலருடைய வரலாறுகள் மனிதனின் சிறப்பைப் புலப்படுத்துகின்றன. உதாரணத்துக்கு இங்கே ஒரு சம்பவத்தை எடுத்துக் கொள்வோம்; முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னே, திருப்பத்துர்ச் சிறையின்மேல் கூரையைப் பிரிப்பதற்குப் பழைய சிறிய இரண்டனா நாணயத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற்றான் தோலன் என்னும் கைதி. வாழைப் பழத்துக்குள் அந்த இரண்டனாவை வைத்து அனுப்புமாறு அவன் ஏற்பாடு செய்து, அந்த இரண்டனாவைப் பழம் தின்னும்போது வாயினுள் அடக்கிக்கொண்டு, நள்ளிரவில் கூரை மரங்களை முடுக்கியிருக்கும் மரைகளைக் கழற்ற அதைப் பயன்படுத்தினான்; விரும்பியபடி வெளியேயும் வந்தான். நன்மை தீமை, தகுதி தகுதியின்மைபற்றிக் கவலை இல்லை. எண்ணிப் பார்த்துப் புதுவகையில் முயற்சியைத் திருப்பும் திறன் எந்தப் பறவைக்கும் இல்லை, எந்த விலங்குக்கும் இல்லை, மனிதனுக்கு மட்டும் உண்டு என்பதே இங்கு நாம் உணரவேண்டிய உண்மையாகும். - ஆகஸ்ட் 1954