மரணத்தை வென்ற மனிதர்கள் 1. மகாத்மா காந்தி காந்திஜியைப் பற்றி எழுதுவதென்றால் என்ன எழுதுவது? - ரொம்பத் திகைப்பே உண்டாகிறது. குள்ளனாக வந்து, மாபலியிடம் யாசகம் கேட்ட விஷ்ணு, பின்பு மூவுலகங்களையும் தாவியளந்து நின்றதுபோலவே யிருக்கிறது காந்திஜியின் விஷயமும், ஒல்லியாக, கவர்ச்சியற்று, அரை நிர்வாணப் பக்கிரியாக விளங்கிய அவர், இந்திய அரசியலுலகிலே வானமும் பூமியுமாகவல்லவோ வளர்ந்து நின்றார்! அபூர்வமான, உலகமே கண்டறியாத மனிதர் அவர். எவ்வளவு புகழ்! என்ன செல்வாக்கு! அம்மட்டோ? - கடவுளுங்கூட வெட்கிப் போகும்படியாகவன்றோ மக்கள் அவரைப் போற்றி வணங்கினார்கள்! இத்தனை புகழுக்கும். பாராட்டுக்கும் ஏதாவது காரணம் இருக்குவேண்டுமல்லவா? அது என்ன? 1857ஆம் ஆண்டு நடந்த இந்திய விடுதலைப் போராட்டம் படுதோல்வியில் முடிந்தது நாடு முழுவதையும் நிராயுதபாணியாக் கியது அன்னிய அரசாங்கம். யுத்தத்தைப் பற்றியும் வீரத்தைப் பற்றியும் நாம் புத்தகங்களில்தான் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியதா யிற்று அமைதியாக ஆங்கில சர்க்காருக்குத் தொண்டு செய்து வந்தோம். படித்த வகுப்பார் சிலர் அவ்வப்போது ஒன்றுகூடி, அரசியல் சீர்திருத்தங்களை வேண்டி வைசிராய்க்கு மனுப் போட்டு வந்தார்கள்; வைசிராயோ அதைக் குப்பைக் கூடையில் போட்டு வந்தார்! இப்படியே காலம் போய்க்கொண்டிருந்தது. சுதந்திர தாகம் மிக்க மக்கள், 'நம் நாட்டுக்கு விமோசனமே கிடையாதா?' என்று ஏங்கி னார்கள் ஆயுதம் எடுத்துப் போரிட்டுத்தான் அன்னிய அரசாங்கத்தை விரட்ட முடியும் என்றால் அதற்கும் உரிமை கிடையாதே! மக்கள் சோர்ந்து போயிருந்த இந்த சமயத்தில், ஒரு நாள் பம்பாய்த் துறைமுகத்திலே நாற்பத்தைந்து வயதுள்ள ஓர் ஆசாமி மூட்டை முடிச்சுகளுடன் வந்து இறங்கினார். அவர் தலையில் குஜராத்தித் தலைப்பாகை இருந்தது ஆளும் ஒல்லியாக, பார்ப்பதற்குக்
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/139
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை