12 'ஏழைக்கு என்ன ஐயா, கேடு? அவன் ஒசியிலேயே எவ்வளவு அன்பு வேண்டுமானாலும் காட்டிவிடலாம்; நான் அன்பு காட்ட வேண்டுமென்றால் காசிலல்லவா கை வைக்க வேண்டியிருக்கிறது!' இந்தப் 'பொன் மொழி எங்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை யென்றாலும், அதற்காக எங்களால் அவரைக் கைவிட முடிய வில்லை. காரணம், நாங்கள் குடியிருந்த வீடுகளெல்லாம் சட்டப் படி - அதாவது, கடவுளுக்கு விரோதமான மனிதனின் சட்டப்படி - அவருடைய அண்ணாவுக்குச் சொந்தமானவையாயும், வேலை செய்த மில்களெல்லாம் அவருடைய தம்பிக்குச் சொந்தமானவை யாயும் இருந்ததுதான்! இப்பொழுதாவது தெரிகிறதா? - எங்களுடைய அன்புக்கு அவர் ஏன் பாத்திரமாகியிருந்தார், அவருடைய அன்புக்கு நாங்கள் ஏன் பாத்திரங்களாகவில்லை என்று? எது எப்படியிருந்தாலும் காந்திமகான் விட்டுச் சென்ற அந்த 'மோகனப் புன்னகை மட்டும் 'எங்கள் ஊர்க் காந்தி'யிடம் தான் இருந்தது. அதைக் கொண்டு அறியாமை நிறைந்த இந்த உலகத்தில் அவர் சாதித்துக் கொண்ட காரியங்கள் எத்தனை எத்தனையோ! அவற்றில் ஒரே காரியம் தான் எங்களில் யாருக்குமே புரியாமலிருந்தது. அதாவது 'கல்லாப் பெட்டி'க்கு அருகே உட்கார்ந்திருக்கும் அவர், தம் பார்வையை அடிக்கடி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக்த் திருப்பிக்கொண்டேயிருப்பார்; திடீரென்று சிரிப்பார்; சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டு வாயின்மேல் விரலை வைத்து, 'ஸ் என்று யாரையோ விரட்டுவதுபோல் விரட்டுவார். இத்தனைக்கும் நாம் பார்க்கும்போது அவருக்கு எதிரே யாரும் இருக்க மாட்டார்கள்! தான் விற்கும் தோல்கள் கூட ஆடு மாடுகளைக் கொன்று குவித்து எடுத்த தோல்களல்ல, அவை இயற்கை மரணம் எய்திய பின் எடுத்த தோல்கள் என்று சொல்லும் அந்த உத்தமர், அந்தப் புண்ணிய புருஷர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று தெரியாமல் நாங்கள் நீண்ட நாட்களாக விழித்துக் கொண்டிருந்தோம்.
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/14
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை