138 கொஞ்சங்கூடக் கவர்ச்சியே இல்லாதவராக ஒரு நாட்டுப் புறத்தானைப்போலக் காணப்பட்டார். அப்போது அங்கே உலாவிக் கொண்டிருந்த ஒரு வர்த்தகப் பிரமுகர்களில் ஒருவர் காந்தியைச் சற்று நேரம் கவனித்துப் பார்த்துவிட்டு, 'யார் இவர், தெரியுமா?' என்று மற்றவரை நோக்கிக் கேட்டார். 'தெரியாதே' என்றார் அவர். 'இவர் தான் மோஹன்தாஸ் காந்தி.' 'ஒஹோஹோ - காபா காந்தியின் பிள்ளையா?" 'ஆமாம்.' 'சிறு வயசிலே ரகசியமாய்ப் பீடி புகைத்துக்கொண்டு திரிவானே, அந்தப் பயலா? 'ஆமாம்.' 'பள்ளிக்கூடத்திலே நடந்த ஒரு விருந்தில் நாலு வார்த்தைகூடப் பேச முடியாமல் திண்டாடித் தவித்தானே, அவனா?" "ஆமாம், ஆமாம்: - அதே ஆள்தான்' 'பாரிஸ்டர் பட்டம் பெற்று வந்ததற்குப் பிறகு, பம்பாய் ஹைக்கோர்ட்டிலே ஒரு வழக்கை நடத்த ஒப்புக்கொண்டு, கடைசியில் எதுவும் பேச முடியாமல் வாங்கிய பணத்தைக் கட்சிக்காரனுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டானே, அந்த இளைஞனா?' 'ஆமாம், அவனே தான்!' 'பேஷ் - வேடிக்கையாயிருக்கிறதே? இப்போது எங்கிருந்து வருகிறான்?' 'தென்னாப்பிரிக்காவில் இருப்பதாய்ச் சொன்னார்கள்: அங்கிருந்துதான் வருகிறான் போலிருக்கிறது!' 'ஆளும் உடையும்! - நாடகத்திலே விகடக் கூத்து ஆடத்தான் லாயக்கு!' காந்திஜியைப் பார்த்துப் பார்த்து அவர்கள் மறைமுகமாகச் சிரித்தார்கள். அவர்கள் மாத்திரமா சிரித்தார்கள் ? எத்தனையோ பேர் சிரித்தார்கள் ஆனால் எதையும் அவர் பொருட் படுத்தவில்லை தலைவர்கள் பலருடன் பழகினார் அரசியல் விவகாரங்களில் கலந்து கொண்டார் செய்ய வேண்டியதை அமைதியாக, படாடோபமற்ற
பக்கம்:மனிதன் இதழ் தொகுப்பு.pdf/140
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை